தலைமுடி கொட்டுவதை சரி செய்ய நினைப்பவரா நீங்கள்? கட்டாயம் இந்த எண்ணெயினை நீங்கள் ட்ரை செய்யவும்.
தேவையானவை
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய் – கால் டம்ளர்
விளக்கெண்ணெய் – கால் டம்ளர்
எலுமிச்சை பழம் – 1
செய்முறை:
1. வாணலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை ஊற்றி நன்கு சூடு செய்து கொள்ளவும்.
2. அடுத்து கறிவேப்பிலையைப் போட்டு லேசாக வதக்கி 3 நாட்கள் ஊறவிடவும்.
3. 3 நாட்கள் கழித்து இந்த ஹேர்பேக்குடன் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் கறிவேப்பிலை எண்ணெய் ரெடி.
கறிவேப்பிலை எண்ணெயினை தலையில் தேய்த்து நன்கு ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசிக் குளித்தால் தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.