குழந்தைகளை குளிக்க வைக்க குளியல் பொடியினை கடைகளிலேயே வாங்கி பொதுவாகப் பயன்படுத்தி இருப்போம். இனி கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம் வாங்க.
தேவையானவை:
ஆவாரம் பூ – 10
மஞ்சள் கிழங்கு- 3
பூலான் கிழங்கு– 3
கோரைக் கிழங்கு- 3
பாசிப் பயறு- 50 கிராம்
செய்முறை:
1. பாசிப்பயறினை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஆவாரம் பூ, பூலான் கிழங்கு, மஞ்சள் கிழங்கு, கோரைக் கிழங்கு இவை அனைத்தையும் காயவைத்துக் கொள்ளவும்.
3. இறுதியில் இவை அனைத்தையும் மில்லில் கொடுத்து அரைத்தால் குளியல் பொடி ரெடி.