அழகுக் குறிப்புகள்

முகப் பருக்களைச் காணாமல் போகச் செய்யும் ஆவாரம் பூ ஃபேஸ்பேக்!!

a1a845b2615e10c782b97e9a32c608bc

முகப் பருக்கள் பொதுவாக உடல் சூட்டால் ஏற்படக் கூடியவை ஆகும். இதனை சரிசெய்ய பலரும் பரிந்துரைப்பது கெமிக்கல் கலந்த கிரீம்களைத்தான். இப்போது நாம் இயற்கையான தீர்வு ஒன்றினை பார்க்கலாம் வாங்க.

தேவையானவை:
ஆவாரம் பூ- 7
தயிர்- கால் கப்
சந்தனப் பவுடர்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    ஆவாரம் பூவினை தயிரில் ஊறவைத்து 2 மணி நேரம் கழித்து மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.
2.    அடுத்து இந்தக் கலவையுடன் சந்தனப் பவுடர் சேர்த்தால் ஆவாரம்பூ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஆவாரம்பூ ஃபேஸ்பேக்கினை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்ற அளவில் பயன்படுத்தினால் முகப்பரு 2 வாரங்களில் சரியாகிவிடும்.
 

Avatar photo
Staff