எலுமிச்சை பழத்தின் தோலை நறுக்கி முகத்தில் அழுத்தி தேய்த்தால் இறந்த செல்கள் அழிந்துவிடும், இதனால் முகமானது பளிச்சென்று இருக்கும். இதுவே இந்த எலுமிச்சைத் தோலினை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைத்துப் பயன்படுத்தினால் வறண்ட சருமப் பிரச்சினை சரியாகிவிடும்.
தேவையானவை:
எலுமிச்சைத் தோல் – 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
பசும் பால்- 4 ஸ்பூன்
செய்முறை:
- எலுமிச்சைத் தோலை சிறு துண்டுகளாக்கி வெயிலில் காய வைக்கவும்.
- அடுத்து இந்த எலுமிச்சைத் தோலை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- இந்த எலுமிச்சைப் பொடியுடன் தேங்காய் எண்ணெய்ம் பசும் பால் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால் என வறண்ட தோல் உள்ள இடங்களில் அழுத்தி தேய்க்கவும், அதன்பின்னர் சோப்பு போட்டு கழுவி விடவும், தோலில் உள்ள வறட்சித் தன்மையானது குறைந்திருக்கும்.