கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் பங்கு குங்குமத்திற்கு உண்டு என்பது நாம் அறிந்ததே. அத்தகைய குங்குமத்தை எப்படிப் பயன்படுத்தினால் முகமானது வெள்ளையாகும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தேவையானவை:
குங்குமப் பூ-5
தயிர்- கால் கப்
சந்தனத் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை:
- குங்குமப் பூவினை தயிருடன் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
- அடுத்து அதனுடன் சந்தனத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.
- அவ்வளவுதான் குங்குமப்பூ ஃபேஸ்பேக் ரெடி.
இதனை மற்ற ஃபேஸ்பேக்குகளைப் போல் பயன்படுத்தி வரவும். அவ்வாறு பயன்படுத்தி வந்தால் உங்கள் முகம் வெள்ளையாக மாறியுள்ளதை நீங்கள் உணர்வீர்கள்.