வாழைப் பழத்தில் உள்ள அதிக அளவு ஃபைபரானது தலைமுடி வளர்ச்சிக்கு உதவவும், முக அழகினைக் கூட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய வாழைப்பழத்தில் ரொம்பவும் சிம்பிளான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
1. வாழைப்பழம்- 1
2. தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
3. வைட்டமின் ஈ காப்சியூல்- 1
செய்முறை:
- வாழைப்பழத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுத்து இதனை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ காப்சியூலைச் சேர்க்கவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும், மேலும் இந்த ஃபேஸ்பேக்கினை 30 நிமிடங்கள் ஊறவிட்டு முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு நிச்சயம் கூடும்.