கிரீன் டீயானது உடல் எடையினைக் குறைக்கும் என்பது நாம் அறிந்த விஷயமாகும், அத்தகைய கிரீன் டீயில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கிரீன் டீத் தூள்- 1 ஸ்பூன்
நெல்லிக்காய்- 2
தண்ணீர்- கால் கப்
செய்முறை:
- நெல்லிக்காயினை கழுவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிரீன் டீத் தூளைப் போட்டு10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- அடுத்து கொதித்த கிரீன் டீக் கலவையுடன் நெல்லிக்காயினைப் போட்டு கொதிக்கவிடவும்.
இந்த கிரீன் டீ ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் போட்டு அலசி விடவும்.