முகத்தினை வெள்ளையாக மாற்ற நினைத்தால் பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, வீட்டில் இருந்தபடியே கொய்யா இலை ஃபேஸ்பேக்கினை தொடர்ந்து பயன்படுத்தி முகத்தினை வெள்ளையாக மாற்றலாம்.
தேவையானவை:
கொய்யா இலை- 10
தேங்காய்ப் பால்- 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
செய்முறை:
- கொய்யா இலையை நறுக்கி தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து இந்தக் கலவையில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் கொய்யா இலை பேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து கழுவினால் முக அழகு நன்கு பெறும்.