கூந்தல் உதிர்தலுக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் சிறப்பான ஹேர்பேக்கினை வீட்டில் எப்படித் தயாரிப்பது என்றும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.
தேவையானவை:
நெல்லிக்காய்- 1
தேங்காய் எண்ணெய்- 20 மில்லி
தேங்காய்ப் பால்- கால் கப்
செய்முறை:
- நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- அடுத்து தேங்காய் எண்ணெயினை சூடாக்கி, அதில் நெல்லிக்காயினைப் போட்டு வாசம் வரும் வரை வதக்கவும்.
- அடுத்து அதில் தேங்காய்ப் பாலை சேர்த்துக் கலந்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
இந்த ஹேர்பேக்கினை தலையில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு முடியினை அலசினால் கூந்தல் உதிர்தல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.