சிவப்பழகினைப் பெற நினைப்போர் பலவகையான ஃபேஸ்பேக்குகளைப் பயன்படுத்துவதையும், பல வகையான செயற்கை கிரீம்களைப் பயன்படுத்துவதையும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இப்போது பச்சை திராட்சையில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
- பச்சை திராட்சைச் சாறு- 5,
- புதினா இலைகள்- கைப்பிடியளவு
- கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
செய்முறை:
- பச்சை திராட்சையினை தோல் உரித்துக் கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் புதினா இலைகள் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் நிச்சயம் சிவப்பாகும். இதனை வாரத்தில் இரண்டுமுறை தொடர்ந்து செய்து வரவும்.