முக அழகினைக் கூட்டும் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது நாம் அத்திப்பழத்தில் ஃபேஸ்பேக் செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
அத்திப்பழம்- 3
தயிர்- கால் கப்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
செய்முறை:
- அத்திப் பழத்தினை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறினையும் கலந்து கொள்ளவும்.
இந்த அத்திப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் தேய்த்து முகத்தை கழுவினால் முக அழகு நிச்சயம் கூடும்.