தலைமுடி உதிர்விற்கு சிறப்பான தீர்வுகளைத் தரும் பல வகையான ஹேர் ஆயில்களை நாம் பார்த்திருப்போம், அவற்றில் இப்போது மிகச் சிறந்த ரிசல்ட்டினைக் கொடுக்கும் ஹேர் ஆயில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
1. நெல்லிக்காய் கொட்டை- 5
2. தேங்காய் எண்ணெய் -50 மில்லி
செய்முறை:
1. நெல்லிக்காய் கொட்டையினை வெயிலில் காயவைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து இதனை தேங்காய் எண்ணெயில் கொதிக்கவிட்டு நிறம் மாறும்வரை காய்ச்சவும்.
குளிரவைத்த பின்னர் இதனை தலைமுடியின் வேர்க் கால்களில் அப்ளை செய்தால் தலைமுடி உதிர்வானது கட்டுக்குள் வரும்.