முக அழகினைக் கூட்டும் வகையில் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது நாம் வீட்டில் உள்ள பொருட்களான தக்காளி ஃபேஸ்பேக்கினை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
தக்காளி- 2
முட்டையின் மஞ்சள் கரு- 1
ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
செய்முறை:
1. தக்காளியினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து முட்டையின் மஞ்சள் கருவுடன் தக்காளியினை சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
3. அடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரைக் கலந்து கொள்ளவும்.
அடுத்து இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊற வைத்து மசாஜ் செய்யவும், அதன்பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இதனை வாரத்தில் இரண்டு முறை என்ற அளவில் அப்லை செய்தால் முக அழகு நிச்சயம் கூடும்.