வாழைப் பூ பொதுவாக 10 ரூபாய் என்ற அளவிலேயே இருக்கும். இந்த வாழைப் பூவில் உள்ள நன்மைகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
வாழைப் பூ அதிக அளவு நார்ச்சத்துகளைக் கொண்டு இருப்பதால் இதனை உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் வாரத்தில் மூன்று நாட்கள் என்ற அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்துவிடும்.
மேலும் இது குடல், வாய், தொண்டை மற்றும் வயிற்றுப் புண்களைக் குணமாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. வாழைப்பூவை பொரியல், கூட்டு, மசாலா குழம்பு, சாம்பார், பக்கோடா, ஃபிங்கர் சிப்ஸ், குருமா குழம்பு எனப் பல வகைகளாக செய்து சாப்பிடலாம்.
மேலும் வாழைப் பூ அதிக அளவு உவர்ப்புத் தன்மை கொண்டதாக உள்ளதால் இதனை சர்க்கரை நோயாளிகள் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது.
செரிமானத்தன்மை அதிகரிப்பதாக இருப்பதால் இதனை குழந்தைகளும், பெரியவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருப்பதால், பெண்களும் கட்டாயம் வாரத்தில் இரண்டு முறை என்ற அளவில் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
மேலும் வாழைப் பூ மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு பெரும் தீர்வாக உள்ளது. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் வாழைப் பூவில் பொரியல் செய்து சாப்பிட வேண்டும்.