அரசின் உத்தரவை மீறி கடையடைப்பு போராட்டம் நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்களா? அதிரடி முடிவெடுக்கும் தமிழக அரசு.. டாஸ்மாக் ஊழியர்கள் அரசு ஊழியர்கள்.. அவர்கள் தங்கள் கோரிக்கையை வைக்கலாமே தவிர, கடையை மூட யார் அதிகாரம் கொடுத்தது? இது அரசு பணி விதிகளை மீறிய செயல்.. சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யலாம்.. இப்படியே போனால் டாஸ்மாக்கை தனியாருக்கும் கொடுக்கும் முடிவை அரசு எடுத்தால் ஊழியர்கள் எங்கே போவார்கள்.. அதுதான் நடந்துவிடும் போல தெரியுது…
ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில், தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் சுற்றச்சூழல் பாதுகாப்புக்கான புதிய விதிகளுடன் கூடிய காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மதுபானக் கடைகளில் MRP-க்கு மேல் கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுத்தல் மற்றும் வெளிப்படையான கணக்கு வழக்குகளைக் கொண்டு வருதல் ஆகிய உயரிய நோக்கங்களுடன் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்காமல், நவம்பர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முன்அனுமதியின்றி தன்னிச்சையாகக் கடைகளை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்அறிவிப்பின்றி நடைபெற்ற இந்தச் சட்டவிரோதக் கடையடைப்பு போராட்டத்தால் அரசுக்கு ஒரே நாளில் சுமார் 150 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நலனுக்காகவும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகவும் அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளைச் செயல்படுத்த மறுத்து, பொதுமக்கள் மற்றும் அரசுக்கு அவப்பெயரையும் வருவாய் இழப்பையும் ஏற்படுத்திய ஊழியர்களின் இத்தகைய செயல்பாட்டைத் தவெக அரசு சகித்துக் கொள்ளாது என்ற கட்டத்திற்கு வந்துள்ளது. இது தெளிவான அரசு பணி விதிகளை மீறிய ஒழுங்கீனச் செயலாகும்.
இதன் காரணமாக, முன்அனுமதியின்றித் தன்னிச்சையாகக் கடைகளைப் பூட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவருக்கும் *”ஏன் உங்களை உடனடியாகப் பணியில் இருந்து விடுவிக்கக்கூடாது?”* என்று கேள்வி எழுப்பி டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அதிரடியாக மெமோ அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் என்பவர் அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டுப் பணியாற்ற வேண்டியவர்கள்; அவர்களுக்கான நியாயமான கோரிக்கைகளை முறைப்படி கோரிக்கை மனுவாக அரசுக்கு அளிக்கலாமே தவிர, தன்னிச்சையாக அரசு நிறுவனமான கடைகளை மூடுவதற்கு யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இத்தகைய நடவடிக்கை பணி மெத்தனப் போக்கையும் சட்டமீறலையும் காட்டுகிறது. அளிக்கப்படும் விளக்கம் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், அவர்கள் மீதான இடைநீக்கம் அல்லது பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் அரசு கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்டு அரசை மிரட்டும் போக்கில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடுவார்களேயானால், இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணத் தவெக அரசு தயாராகி வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவர்களைப் பிற அரசுத் துறைகளில் காலியாக உள்ள மாற்றுப் பணிகளுக்கு அனுப்பிவிட்டு, டாஸ்மாக் கடைகளின் நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் அதிரடி முடிவைக் கையில் எடுக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.
முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆட்சியில் எந்தவொரு துறையிலும் ஊழலுக்கோ, முறைகேடுகளுக்கோ அல்லது அரசுக்கு எதிரான சட்டவிரோதப் போராட்டங்களுக்கோ இடம் கிடையாது என்பது தெளிவாகிறது. வெளிப்படையான நிர்வாகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கும் தவெக அரசு, டாஸ்மாக் ஊழியர்களின் இந்த அத்துமீறல் விவகாரத்தில் சமரசமின்றி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது.





