நேஹா ஒரு வட இந்திய ஜூலி.. ஒழுங்கா படிச்சோமா, நல்ல வேலைக்கு போனோமா, வீட்டுக்கும் நாட்டுக்கும் உண்மையா இருந்தோமான்னு போகா, எதுக்கு நேஹா உனக்கு இந்த தேவையில்லாத ஆசை.. உன் அரசியல் ஆசைக்காக எதுக்கு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு நாட்டை துண்டாக்க நினைக்கிற.. ராகுல் காந்தியோட கைகோர்த்தப்பயே தெரிஞ்சிருச்சு, நீ ஒரு அந்நிய நாட்டு கைக்கூலின்னு.. ஆனால் அதெல்லாம் எங்க மோடி, அமித்ஷா கிட்ட நடக்காது..
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற SIR மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டங்களின் மூலம் நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படும் நபர் நேஹா போரா. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கும் இவர், அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று, கலை மற்றும் சமூகப் போராட்டங்களின் வழியே தீவிர அரசியலில் தடம் பதித்துள்ளார்.
நேஹா போரா தலைமை தாங்கும் AISA அமைப்பானது, இடதுசாரி சித்தாந்தக் பின்னணியைக் கொண்ட அமைப்பாகும். நீட் தேர்வு முறைகேடு, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் எனத் தொடர்ச்சியான அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் இவர் முன்னணியில் நின்று செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக்குடன் சேர்ந்து நடத்தப்பட்ட 23 நாள் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அண்மையில் டெல்லியில் நடந்த வீதிப் போராட்டங்கள் இவரைச் சமூக ஊடகங்களில் அதிகளவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.
இருப்பினும், இவரைச் சுற்றி எழும் முக்கியக் கேள்வி என்னவென்றால், இவரின் போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பது வெறும் மாணவர் நலன் தானா அல்லது பெரிய அளவிலான அரசியல் கூட்டணியா என்பதுதான். ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், CJP மற்றும் இடதுசாரி அமைப்புகளுக்கிடையே இவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்துத் தீவிரமான விவாதங்கள் எழுந்து வருகின்றன. ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்த செய்தியாளர் சந்திப்பில் இவர் பங்கேற்றது இந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியது.
இடதுசாரி அமைப்பில் பொறுப்பில் இருக்கும் ஒருவர், காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடனும், CJP அமைப்பின் அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் போன்ற போராளிகளுடனும் ஒரே மேடையில் இயங்குவது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளைத் தளமாகக் கொண்டு இயங்கும் போராட்டங்களுக்குப் பின்னால், எதிர்க்கட்சிகளின் அரசியல் ரகசிய உத்திகள் ஒளிந்திருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மறுபுறம், நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் இளைஞர்களை ஒடுக்கவே ஆளுங்கட்சியும் அதன் ஆதரவாளர்களும் இத்தகைய அரசியல் சாயத்தைப் பூசுகிறார்கள் என்று இவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் ஆதரவு பெற்ற AISA அமைப்பின் தலைவராக இருக்கும் நேஹா போரா, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் அரசியல் மேடைகளில் தொடர்ந்து தோன்றுவது சாதாரணமான விஷயம் அல்ல என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
இடதுசாரி தீவிரவாதம், மாணவர் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் சுயநலம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளதா அல்லது இது வெறும் சித்தாந்த ரீதியான தற்செயல் சந்திப்பா என்ற கேள்வி இந்திய அரசியல் களத்தில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. உண்மையான பின்னணி என்ன, இதன் பின்னணியில் உள்ள தூண்டுதல்கள் என்ன என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் மக்களே உன்னிப்பாகக் கவனித்துத் தீர்மானிக்க வேண்டும்.





