இடைத்தேர்தல் முடிந்தவுடன் தவெகவுக்கு வரும் 8 எம்.எல்.ஏக்கள்? அதிமுக எம்.எல்.ஏக்கள் அல்ல, திமுக எம்.எல்.ஏக்கள்.. செங்கோட்டையனிடம் ரகசிய பேச்சு என தகவல்.. உதயநிதியிடம் கட்சி சென்றுவிட்டால் அவரால் விஜய்யை தோற்கடிக்க வாய்ப்பே இல்லை என்பதால் திடீர் முடிவு.. இடைத்தேர்தலில் திமுக 3வது இடம் வந்தாலோ அல்லது டெபாசிட் இழந்தாலோ மேலும் சில எம்.எல்.ஏக்கள் தவெக செல்ல வாய்ப்பு.. இன்னும் சில வருடங்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து இடைத்தேர்தல் தான் போல தெரியுது.. எல்லா இடைத்தேர்தலிலும் தவெக வெற்றி பெற்றால் ஈசியா 120ஐ தாண்டிடும்.. அப்புறம் இருக்குது வேட்டை…
தமிழக அரசியலில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள சூழலில், அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வந்த போதிலும், “திமுகவில் இருந்து ஒரு எம்.எல்.ஏ கூட தவெக பக்கம் போகவில்லை” என்று திமுக தலைமை பெருமையுடன் மார்தட்டி வந்தது. ஆனால், இந்த மார்தட்டலுக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் நாடகமும், எம்.எல்.ஏ-க்களைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொய்யான நம்பிக்கையும் மட்டுமே காரணமாக இருந்தது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“அடுத்த ஆறு மாதத்திற்குள் தவெகவின் ஆட்சி கவிழ்ந்துவிடும், அதனால் அவசரப்பட்டு யாரும் பதவி விலக வேண்டாம்” என்று திமுக தலைமை தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்ச்சியாக போதனை செய்து கட்டுக்குள் வைத்திருந்ததாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், இந்தத் தற்காலிகத் தடுப்புச் சுவர் தற்போது முற்றிலுமாக உடைந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தவெக தரப்பில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் செங்கோட்டையனிடம் பல திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திரைமறைவில் ரகசியப் பேச்ச வார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்தே, செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய செங்கோட்டையன், “திமுகவில் இருந்தும் மிக விரைவில் பல எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்கு வருவார்கள்” என்று மிகவும் சூசகமாகவும் கெத்தாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது நடைபெற்று முடிந்துள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளுக்காகவே இந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் காத்திருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தங்களது அடுத்தகட்ட அரசியல் நகர்வைத் தீர்மானிக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர். திமுகவிலேயே தொடர்ந்து நீடித்து அரசியல் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வதா அல்லது உடனடியாகத் தங்களின் எம்.எல்.ஏ பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் அலையோடு இணைந்து தவெகவில் தங்களை இணைத்துக் கொள்வதா என்கிற தீவிர ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், இடைத்தேர்தலில் திமுக எதிர்பாராத மாபெரும் தோல்வியைத் தழுவினால், இனியும் அந்தக் கப்பலில் பயணிப்பது சாமர்த்தியம் அல்ல என்பதை உணர்ந்து, உடனடியாக தவெகவுக்குத் தாவுவதற்கு சுமார் 8 திமுக எம்.எல்.ஏ-க்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 8 சட்டமன்ற உறுப்பினர்களின் சாத்தியமானத் தாவல் குறித்த செய்தி, அறிவாலயத் தலைமையை அடியோடு கதிகலங்கச் செய்துள்ளது. தங்களது சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்களையே தக்கவைத்துக் கொள்ள முடியாமல் திமுக தலைமை தத்தளித்து வருவதை இந்த நிகழ்வு வெளிப்படையாகக் காட்டுகிறது.
மறுபுறம், வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் கள நிலவரம் திமுகவுக்கு முற்றிலும் பாதகமாகவே அமைந்துள்ளதாகத் தேர்தல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற சாத்தியம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. குறிப்பாக, தாராபுரம் தொகுதியில் திமுக தனது வைப்புத்தொகையை இழக்கும் அளவுக்கு தவெகவின் எழுச்சி அலை வீசியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆளுங்கட்சி வட்டாரத்தை உலுக்கியுள்ளன.
எனவே, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் தருணம், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமையப் போகிறது. திமுகவின் சாம்ராஜ்யம் சரிவதையும், விஜய்யின் தவெக நோக்கி மக்கள் பிரதிநிதிகள் படையெடுப்பதையும் தடுப்பது இனி எவராலும் முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இந்த 8 எம்.எல்.ஏ-க்களின் முடிவு, வரும் நாட்களில் திமுகவின் ஆட்சி அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தவெகவை தமிழகத்தின் முதன்மைச் சக்தியாக அரியணையில் ஏற்றப் போவது உறுதி.





