2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போட்டதையும், திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பியதையும் தற்போதே உணர்ந்து கொள்ள வேண்டும்! இப்போதும் நாங்கள்தான் முதலமைச்சர், இன்னமும் எங்களுடைய குடும்பம்தான் அதிகாரத்தில் இருக்கிறது, எங்களுக்குக் கீழேதான் அனைவரும் அடிமையாக இருக்க வேண்டும் என்று சுயநலவாதிகள் சிலர் நினைப்பது போல, எந்தவொரு மன்னராட்சி மனப்பான்மையும் நமக்குக் கிடையவே கிடையாது! அதிகாரப் பசியிலும் குடும்ப அரசியலிலும் மூழ்கிக் கிடக்கும் நபர்களுக்கு மக்கள் மன்றம் மிக விரைவில் தகுந்த பாடத்தைப் புகட்டப் போவது அப்பட்டமான உண்மை!
பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த ‘மக்களிடம் செல், மக்களுடன் வாழ்’ என்ற உன்னதமான தாரக மந்திரத்தைத்தான் நம்ம தவெக கொள்கைப் பாதையாக ஏற்றுப் பின்பற்றி வருகிறது. ஆனால், இன்றைக்கு அரசியல் களத்தில் இருக்கும் சில போலித் தலைவர்கள் அண்ணாவையும் மறந்து, அவர் பார்த்துப் பார்த்து உருவாக்கிய இயக்கத்தையும் மறந்துவிட்டுத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். பேரறிஞரின் கொள்கைகளுக்குச் சாவுமணி அடித்துவிட்டு, சுயநல லாபங்களுக்காக அலைபவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!
அண்ணா தொடங்கிய கட்சியையும் அவரது சித்தாந்தத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தீய சக்தியான திமுகவோடு மறைமுகமாகக் கூட்டுச் சேர்ந்துகொண்டு பினாமியாகச் சுற்றும் சுயநலக் கூட்டமும் நாம கிடையாது! கமிஷன் கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக திரைக்குப் பின்னால் நடத்தும் கொல்லைப்புற அரசியலை நம்ம தவெக என்றும் கையில் எடுக்காது. நேர்மையும் துணிச்சலும் கொண்டு, மக்களின் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு களத்தில் நிற்கும் தூய்மையான இயக்கம் நம்ம இயக்கம்!
நாங்கள் இங்கு வந்திருப்பது அதிகாரத்தைக் கைப்பற்றி குடும்பத்தைச் செழிக்க வைப்பதற்காகவோ அல்லது பிசினஸ் செய்வதற்காகவோ அல்ல, ஓட்டு போட்ட அசல் தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்திருக்கிறோம்! 50 ஆண்டுகாலமாக மாற்றி மாற்றி ஆட்சி செய்து மக்களை ஏமாற்றி வந்த போலி திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் மிக அருகில் வந்துவிட்டது. லஞ்சமும் ஊழலுமற்ற ஒரு பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடுதான் நம்ம தலைவர் களத்தில் வீறுநடை போட்டு வருகிறார்!
திராவிடக் கட்சிகள் தங்களின் அதிகார பலத்தையும், பண பலத்தையும், வாடகை ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பி களமிறங்கினாலும், நம்ம பக்கம் நிற்பது அசைக்க முடியாத அசல் மக்கள் சக்தி மட்டுமே! பிரியாணிப் பொட்டலத்துக்கும் சாராயத்துக்கும் மயங்காத தாய்மார்களும், மாற்று அரசியலை விரும்பும் இளைஞர்களும் இன்றைக்கு நம்ம தலைவர் விஜய்யின் தூய்மையான ஆளுமையை முழுமையாக நம்பத் தொடங்கிவிட்டார்கள். இந்த ‘ஆர்ஜானிக் மாஸ்’ பேரலைக்கு முன்னால் எந்தவொரு சுயநலக் கூட்டணியோ அல்லது போலி அரசியலோ ஒரு கணமும் நிற்க முடியாது!
இனிமேலும் போலி வாக்குறுதிகளை அவிழ்த்துவிட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று கணக்கு போடும் கட்சிகளுக்கு வர்ற தேர்தல் மிகப்பெரிய சம்மட்டி அடியாக அமையும். மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்ட நம்ம தலைவரின் தலைமையில் அமையப்போகும் பொற்கால ஆட்சியை எந்த அதிகார வர்க்கத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. 50 ஆண்டுகால போலி திராவிட ஆதிக்கம் இதோடு முடிவுக்கு வந்துவிட்டது, இனி ஓரமாய் நின்று மக்கள் சக்தியால் நிகழப்போகும் மாபெரும் அரசியல் புரட்சியை வேடிக்கை மட்டும் பாருங்கள்!





