செய்திகள்

மதுரை விசிட்டுக்கு பின் மதுரை மக்களுக்கு ஒரு அன்பு பரிசு.. மதுரை எம்.எல்.ஏ ஒருவர் அமைச்சராகிறார்… 3 அமைச்சர் பதவி காலி.. 4 தவெக எம்.எல்.ஏக்களுக்கு புதிய அமைச்சர் பதவி.

மதுரை விசிட்டுக்கு பின் மதுரை மக்களுக்கு ஒரு அன்பு பரிசு.. மதுரை எம்.எல்.ஏ ஒருவர் அமைச்சராகிறார்… 3 அமைச்சர் பதவி காலி.. 4 தவெக எம்.எல்.ஏக்களுக்கு புதிய அமைச்சர் பதவி.. சில அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம்.. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு இப்போதைக்கு எந்த பதவியும் கிடையாது.. 2031க்கு பின்னர் தான் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவியாம்.. ரசிகர் மன்ற காலத்தில் இருந்து ரத்தம் சிந்தி உழைத்தவர்களுக்கே உரிய மரியாதை செய்ய விரும்பும் முதல்வர் விஜய்…

தமிழக அரசியலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பான விவாதங்கள் உத்வேகம் பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் ஏற்படப் போகும் இந்த அதிரடி மாற்றங்கள் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் யார் எந்தப் பதவியில் தொடர்வார்கள், யாருடைய பதவி பறிபோகப் போகிறது என்கிற கணக்கீடுகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, நிர்வாகத் திறமையின் அடிப்படையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதால் அமைச்சர்கள் மத்தியில் ஒருவித கலக்கமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக, முதல்வர் விஜய் தன்வசம் வைத்துள்ள சில முக்கிய துறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அதேசமயம், அமைச்சர்களாகப் பதவி வகிக்கும் சரத், ஜெகதீஸ்வரி மற்றும் விஜய் பார்த்திபன் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் செய்திகள் கட்சிக்குள் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நேரத்தில் எழும் இந்தச் சோதனைகளும் அமைச்சரவை சீரமைப்பும் தவெகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், தென் மாவட்டமான மதுரைக்கு மீண்டும் அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சி தொடங்குவதற்கு முன்பாக, ரசிகர் மன்ற காலத்திலிருந்தே விஜய்யுடன் மிக நெருக்கமாகப் பயணித்து உழைத்த மதுரையைச் சேர்ந்த ஒரு தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு இந்தப் புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த நியமனம் இருக்கும் என்று தவெக தொட்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மறுபுறம், தனது பதவி எங்கு பறிபோய்விடுமோ என்ற பயத்தில் சில அமைச்சர்கள் டெல்லி மற்றும் முக்கிய புள்ளிகளைப் பிடித்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓட்டம் பிடித்து வருவதாகவும் அரசியல் அரங்கில் கிசுகிசுக்கப்படுகின்றன. இதற்கிடையில், புதிதாக வேறு யாரும் அமைச்சரவைக்குள் நுழைந்துவிடக் கூடாது என்று இன்னொரு தரப்பு தங்களுக்குள் ரகசியக் காய்களை நகர்த்தித் தடைகளை ஏற்படுத்த முயன்று வருகிறது. இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவுகள் எங்குமே கசியாமல் முழுக்க முழுக்க முதல்வர் விஜயின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் கைகளிலுமே முழுமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாகக் கட்சிக்காக வியர்வை சிந்தி, ரசிகர் மன்ற காலம் தொட்டு தன்னோடு பயணித்த உண்மையான சட்டமன்ற உறுப்பினர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் ஓரங்கட்டிவிட்டு, மாற்றுக் கட்சிகளில் இருந்து புதிதாகத் தாவிக் வந்தவர்கள் மட்டும் அதிகார மையங்களில் ஆதிக்கம் செலுத்துவதை முதல்வர் விஜய் ஒருபோதும் விரும்புவதில்லை என்றே கூற வேண்டும். தூய்மையான மற்றும் தகுதியான உழைப்புக்கு மட்டுமே தன் அரசில் இடமுண்டு என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த அதிரடி மாற்றங்களை அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தவெகவின் அடிமட்டத் தொண்டர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளரும் அரசியல் சூழலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவின் வலிமையை நிரூபிக்கவிருக்கும் அதேவேளை, இந்த அமைச்சரவை மாற்றமும் கட்சிக்குள் புதிய ஒழுங்கைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. யார் கட்சிக்காகக் களத்தில் நிற்கிறார்கள், யார் மக்களுக்கு உண்மையாகச் சேவை செய்கிறார்கள் என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து எடுக்கப்படும் இந்த முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியிருப்பினும், விஜய்யின் இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் எதிர்க்கட்சிகளை உலுக்கி எடுத்து வருவதுடன், மாநில அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Avatar photo
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.