இந்த ஆண்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் தளிகை இடுவதில் சிக்கல் உள்ளது. ஏன்னா நவராத்திரி ஆரம்பிச்சிடுது. பொதுவாக நவராத்திரி ஆரம்பிச்சிட்டாலே தளிகை இடுவது பல வீடுகள்ல வழக்கமாக இருக்காது. ஏன்னா கொலு வச்சிடுவோம். அந்த கொலு வைக்கிறதுனால நமக்கு தளிகை போடுவது, விரதம் இருக்குறது என எல்லாத்தையும் தள்ளி வச்சிட்டு கொலுவிலேயே முழுக்க முழுக்க கவனம் செலுத்துறது மாதிரி ஆகிடும்.
அப்படின்னா எப்போ தளிகை போடுவதுன்னு கேட்கலாம். முதல் வாரமே தளிகை போடலாம். அல்லது முதல் வாரம் மாதவிலக்கு, ஊருல இல்லைன்னு சொல்பவர்கள் 2வது வாரம், 3வது வாரம் தளிகை போடலாம். அது அவரவர் சவுகரியம். 4வது வாரம் பார்க்கும்போது அமாவாசைக்கு அடுத்தநாள் நவராத்திரி ஆரம்பிச்சிடுது. 10.10.2026 அன்று சனிக்கிழமை.
அதே நாளில் அமாவாசை. அதனால இதுல ஒரு சிக்கல் இருக்கு. இதுல உங்களது சவுகரியம் எதுவோ, நீங்கள் கொலு வைக்கிறீங்களோ, இல்லையோ அதைத் தீர்மானம் பண்ணிக்கிட்டு இந்த தளிகைக்கான நேரத்தையும், நாளையும் குறிச்சிக்கோங்க. தளிகைக்கு 5 வகையான சாதம் தயார் செய்யணும். சர்க்கரைப் பொங்கல், புளிசாதம், எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம். சுண்டல், வடை, பானகம். இவையே பெருமாளுக்கே விருப்பமானவை.
மாவிளக்கு போடுபவர்கள் அன்றே போடலாம். சிலர் கலவை சாதம் அல்லாமல் வடை, பாயாசம், அப்பளத்தோடு, கூட்டு, பொரியல், சாம்பார் என சாப்பாட்டை தளிகை போடுவாங்க. அந்த வகையில் முதல் சனிக்கிழமை (19.6.2026) தளிகை இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை போடலாம். கடைசி வாரமும் இதே நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.





