இறைவன் மீது அன்புள்ளவர்கள், நாட்டம் உள்ளவர்கள் எதிர்பார்க்கக்கூடிய பல மாதப்பிறப்புகள்ல ஒரு முக்கியமான மாதம் புரட்டாசி. பெருமாள் கோவில் வழிபாடு இந்த மாதத்தில் சிறப்புக்குரியது. நம் முன்னோர்கள் பெருமாள் கோவில் போவது, தானம் பண்ணுவதுன்னு நிறைய விஷயங்களை இந்த புரட்டாசி மாதத்தில் தான் செய்துள்ளனர். அந்த வகையில் இன்று (18.9.2026) புரட்டாசி மாதம் பிறந்துள்ளது.
கிருஷ்ணருக்குப் பிடித்தது அஷ்டமி. ராமருக்குப் பிடித்தது நவமி. அதனால தான் இரண்டு பேருமே அதுல அவதாரம் பண்ணிக் காட்டுனாங்க. அதனால இந்த திதிகளோ, நட்சத்திரங்களோ எதுவாக இருந்தாலும் அது எல்லா தெய்வத்தோடும் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடன் தான் உள்ளது. அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த ஆண்டு புரட்டாசியில் 5 சனிக்கிழமைகள் வருகின்றன. 19, 26.9.2026, 3, 10, 17.10.2026 ஆகிய நாள்களில் சனிக்கிழமைகள் வருகின்றன.
பொதுவாகப் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பல்வேறு விதமான வழிபாடுகளைச் செய்யலாம். மாவிளக்கு ஏற்றி வழிபடலாம். நமக்கு வேண்டுதல்கள் நிறைவேறி விட்டால், வீடுகள்ல போய் கோவிந்த ரட்ச கோவிந்தா, வெங்கட் ரமணா கோவிந்தா அப்படின்னு பெருமாளை வேண்டி கையேந்தி அரிசி வாங்கிட்டு வரணும். அதை நாலு வாரம் சேர்த்து வைத்து கடைசி வாரம் அன்னதானம், படையல் போடுவது வழக்கம்.
ஒரு சிலருக்கு இந்த வாரம் என்ன கிடைக்குதோ, அதையே படையல் இடும் வழக்கம் உண்டு. துளசி கல்யாணம், ராமாயணம், மகாபாரதம் படிக்கலாம். இது அவரவர் வசதிக்கேற்றது. முக்கியமாக தளிகை இடுவது உண்டு. ராமரை வைத்து வழிபடலாம்.
அவரது திருவுருவப் படம். அல்லது கிருஷ்ணர் படம் வைத்து வழிபடலாம். முதல்நாளே சாமிக்கு நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல், வடை வைத்து வழிபாடு செய்வார்கள். சனிக்கிழமை அன்றும் தளிகை போடலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.





