வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி? கலசம் வைப்பவர்கள் செய்ய வேண்டியது என்னென்ன?

வரலட்சுமி விரதம் அன்று வீட்டில் உள்ள மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு எளிமையா சந்தன, குங்குமம் வைங்க. நைவேத்தியமா பால், பழம் வச்சி பூ போட்டு அர்ச்சனை பண்ணி பூஜை செய்து வழிபாடு பண்ணுங்க. கலசம் வைத்து…

வரலட்சுமி விரதம் அன்று வீட்டில் உள்ள மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு எளிமையா சந்தன, குங்குமம் வைங்க. நைவேத்தியமா பால், பழம் வச்சி பூ போட்டு அர்ச்சனை பண்ணி பூஜை செய்து வழிபாடு பண்ணுங்க. கலசம் வைத்து வழிபாடு பண்ணுபவர்கள் அதன்படி செய்யலாம். இன்று வரலட்சுமி நோன்பு.

இன்று காலை 6 மணி முதல் 7.20 மணிக்குள் அம்பாளை வீட்டிற்கு அழைக்கலாம். காலை 9 மணிக்கு ஆரம்பித்து 10.20 மணிக்குள் வழிபடலாம். அல்லது 10 மணி முதல் 12 மணிக்குள் வழிபட்டு நோன்புக் கயிறு கட்டிக் கொள்ளலாம். மாலையில் வழிபடுபவர்கள் 6 மணிக்கு மேல வழிபடலாம்.

வெள்ளிக்கிழமை காலை அம்பாளை அழைத்தவர்கள் 23.8.2026 (ஞாயிறு) அன்று காலை 7 மணி முதல் 9 மணிக்குள் புனர்பூஜை செய்யலாம். அல்லது அன்று காலை 10 மணி முதல் 11.45மணிக்குள் புனர் பூஜை செய்யலாம். இந்த நேரத்தை அவரவர் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருவுருவப்படம் வைத்தும், கலசம் வைத்தும் வழிபடலாம். பித்தளை அல்லது செப்புக்குடம் வைத்தும் வழிபடலாம். வசதி உள்ளவர்கள் வெள்ளிக்குடம் பயன்படுத்தலாம். நூல் சுத்தத் தெரிந்தால் சுத்தலாம். அல்லது அதன் வாயில் ஒரு மஞ்சள் கயிறைக் கட்டலாம்.

குடத்துக்குள் தண்ணீர் அல்லது அரிசி நிறைக்கலாம். நீர்னா அதுல மஞ்சள், வாசனைத்திரவியப்பொடி, நாணயங்கள், ஏலக்காய், மாசிக்காய், கிராம்பு, எலுமிச்சம்பழம் போடலாம். இதுல வைக்கிற அரிசியை நாம எடுத்து பொங்கல் வைத்து நைவேத்தியமா படைக்கலாம். அல்லது கிருஷ்ண ஜெயந்தி அன்று பலகாரம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.