இன்னும் எத்தனை காலம் தான் தண்ணி கொடு தண்ணி கொடுன்னு கெஞ்சிகிட்டு இருக்கிறது.. கடல்ல கலக்குற உபரி தண்ணிய தென் மாவட்டத்து தாகத்துக்கு திருப்புற காலம் இது! தண்ணிங்கிறது வெறும் நதி ஓட்டம் இல்லை

மக்களுக்கு நல்லது செய்யனும்ன்னு உண்மையான நினைக்கிற முதல்வருக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட அருமையான திட்டமெல்லாம் தோன்றும்.. இன்னும் எத்தனை காலம் தான் தண்ணி கொடு தண்ணி கொடுன்னு கெஞ்சிகிட்டு இருக்கிறது.. பக்கத்து மாநிலத்துக்கிட்ட தண்ணிக்காக…

tamil nadu water

மக்களுக்கு நல்லது செய்யனும்ன்னு உண்மையான நினைக்கிற முதல்வருக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட அருமையான திட்டமெல்லாம் தோன்றும்.. இன்னும் எத்தனை காலம் தான் தண்ணி கொடு தண்ணி கொடுன்னு கெஞ்சிகிட்டு இருக்கிறது.. பக்கத்து மாநிலத்துக்கிட்ட தண்ணிக்காக கையேந்துற காலம் முடிஞ்சு போச்சு… கடல்ல கலக்குற உபரி தண்ணிய தென் மாவட்டத்து தாகத்துக்கு திருப்புற காலம் இது! தண்ணிங்கிறது வெறும் நதி ஓட்டம் இல்லை… அது இந்த தமிழ்நாட்டோட உயிர் ஓட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைகளுக்கான குடிநீர், பாசனம் மற்றும் நீர் பாதுகாப்புடன் தொடர்புடைய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த திட்டம் மட்டும் நிறைவேறினால் தமிழ்நாடு தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்று பக்கத்து மாநிலத்திடம் கையேந்தும் நிலை ஏற்படாது.. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சிகள் கண்டுகொள்ளாமல் இருந்த இந்த திட்டத்தை தற்போது முதல்வர் விஜய் கையில் எடுத்துள்ளார். மத்திய அரசு மனது வைத்து, இந்த திட்டம் நிறைவேறினால் தமிழ்நாடு பசுமை மாநிலமாக மாறிவிடும்.. முதல்வரின் கடிதம் குறித்து தற்போது விரிவாக பார்ப்போம்..

தமிழ்நாட்டின் குடிநீர் தேவையும் விவசாயப் பாசனமும் எப்போதும் அண்டை மாநிலங்களைச் சார்ந்தே இருக்கும் சூழலில், கோதாவரி–கிருஷ்ணா–பெண்ணாறு–காவிரி–வைகை–குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம் மாநிலத்தின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான நீர்ப் பாதுகாப்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இயற்கை அளித்த மேற்பரப்பு நீர் மிகக் குறைவாக உள்ள தமிழ்நாட்டில், ஒட்டுமொத்த நீர்த் தேவையில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி வெளிமாநில ஆதாரங்களையே நம்பியுள்ளது.

காவிரி ஆற்றின் நீர்ப்பங்கீட்டுக்காக ஒவ்வொரு ஆண்டும் தொடர் போராட்டங்களைச் சந்தித்து வரும் அதே வேளையில், நிலத்தடி நீர்மட்டமும் அபாயகரமான அளவிற்குச் சரிந்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் போன்ற வறட்சி அபாயம் நிறைந்த தென் மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய, மழைக்காலங்களில் பிற படுகைகளில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரைத் திருப்பும் இந்த திட்டம் அவசியமான தீர்வாக உருவெடுத்துள்ளது.

நதிகளை இணைப்பது என்பது இரு வேறு ஆறுகளை ஒன்றாகக் கலப்பது அல்லாமல், அணைகள், கதவணைகள், கால்வாய்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வழியாக உபரி நீர் உள்ள பகுதியிலிருந்து பற்றாக்குறை நிலவும் பகுதிக்குத் தண்ணீரை மாற்றுவதாகும். தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி, கோதாவரியின் இஞ்சம்பள்ளியிலிருந்து தொடங்கும் நீர் கிருஷ்ணாவின் நாகார்ஜுனசாகர், பெண்ணாற்றின் சோமசிலா வழியாக தமிழ்நாட்டின் எல்லைக்கு எடுத்து வரப்பட உள்ளது.

ஆரம்பகட்ட ஆய்வுகளில் பெருமளவு நீர் மாற்ற முன்மொழியப்பட்டாலும், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் தேவைகள் போக தமிழ்நாட்டிற்கு இறுதிப் புள்ளியில் கிடைக்கக்கூடிய நீரின் அளவு குறித்து திருத்தப்பட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீர், தமிழகத்தின் வறண்ட பகுதிகளைச் சென்றடைவதோடு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பெரிய அளவில் வழிவகுக்கும்.

இந்த நதிநீர் இணைப்புத் திட்டத்தில் தமிழ்நாடு முன்வைக்கும் மிக முக்கிய தொழில்நுட்பக் கோரிக்கை, தண்ணீரை கல்லணையில் முடித்துக் கொள்ளாமல் கரூர் மாவட்டத்திலுள்ள மாயனூர் கட்டளை கதவணை வரை உயர்மட்டக் கால்வாய் மூலம் நீட்டிக்க வேண்டும் என்பதாகும். கல்லணை என்பது காவிரி டெல்டாவின் கீழ்ப்பகுதியில் அமைந்திருப்பதால், அங்கிருந்து தெற்கு மாவட்டங்களுக்கு நீரைத் திருப்பி அனுப்புவது பொறியியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகுந்த சிரமங்களை உருவாக்கும்.

ஆனால், பாலாற்றைக் கடந்த பிறகு உயர்மட்டக் கால்வாய் அமைத்து நீரை மாயனூர் வரை கொண்டு வந்தால், அங்கிருந்து ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள 262 கிலோமீட்டர் நீளமுள்ள மாயனூர்–குண்டாறு கால்வாய் வழியாக அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு மற்றும் வைகை ஆறுகளுக்குத் தண்ணீரைத் தடையின்றிப் பாய்ச்ச முடியும். இதன் மூலம் தேசிய நதிநீர் இணைப்பும், தமிழகத்தின் உள்மாநில நதிநீர் இணைப்பும் ஒரே தொடர்ச்சியான அமைப்பாக மாறி முழுப் பயனளிக்கும்.

மத்திய அரசால் தொடக்கத்தில் மதிப்பிடப்பட்ட சுமார் ரூ.85,962 கோடி திட்டச் செலவு என்பது கல்லணையை இறுதிப் புள்ளியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பழைய கணக்கீடாகும். தற்போது தமிழ்நாடு கோருவது போல மாயனூர் வரை பாதையை மாற்றி அமைத்து, கூடுதல் நீரேற்று நிலையங்கள் மற்றும் கால்வாய்களைக் கட்டும்போது இதன் செலவு மதிப்பீடு கணிசமாக உயரும். மேலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து மாயனூர் முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான முதற்கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தத் தொடங்கியிருந்தாலும், ஒட்டுமொத்த திட்டத்தைச் சாத்தியப்படுத்த மத்திய அரசின் முழுமையான நிதி ஆதரவு அவசியமாகிறது. திருத்தப்பட்ட திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே திட்டத்தின் உண்மையான நிதித் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.

கோதாவரி–காவிரி இணைப்பைக் காலதாமதமின்றிச் செயல்படுத்த வேண்டுமெனில், மத்திய அரசு இத்திட்டத்திற்கு ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்ற அந்தஸ்தை வழங்கி விரைவுப் பாதையில் செயல்படுத்த வேண்டும். ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உபரி நீர் அளவீடு மற்றும் பங்கீட்டில் நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதும், ஒருமித்த கருத்தை உருவாக்குவதும் இதில் உள்ள முக்கிய சவால்களாகும். மேலும், நீரை உயரேற்றுவதற்குத் தேவையான பெருமளவு மின்சாரம், நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி போன்ற சட்டரீதியான தடைகளைக் கடந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் அடங்கிய சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்வதே திட்டத்தின் விரைவான தொடக்கத்திற்கு வழிவகுக்கும்.

இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காலம் காலமாக நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் புதிய பாசன வசதியைப் பெறும். உச்ச நீதிமன்றமும் காவிரி நடுவர் மன்றமும் வழங்கியுள்ள தமிழ்நாட்டின் சட்டபூர்வ உரிமைகளுக்கு இது எந்தவிதத்திலும் மாற்றாக அமையாது, மாறாக மாநிலத்தின் நீர் ஆதாரத்தைப் பலப்படுத்தும் கூடுதல் பாதுகாப்பாகவே இருக்கும். வெறும் அரசியல் அறிவிப்புகளோடு நின்றுவிடாமல், அறிவியல் பூர்வமான ஆய்வுகள், வெளிப்படையான நிதித் திட்டம் மற்றும் மாநிலங்களின் கூட்டுறவு ஆகியவற்றுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது தமிழகத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளின் நீர்வளத்தைப் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலமாக அமையும்.