உதயநிதி கைதான போன வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர்… மேயர் ப்ரியா உள்பட 1000 திமுகவினர் மீது வழக்குப்பதிவு.. போராட்டம் பண்ணினவங்களை காலையில் கைது செய்து மாலையில் விடும் அரசுன்னு நினைச்சிட்டீங்களா? இது விஜய்யோட தவெக அரசு.. சட்டத்தை கையில் எடுத்தா, சட்டம் தன் கடமையை செய்யும்.. ஒரு மேயரே இப்படி செஞ்சா சாதாரண தொண்டன் எப்படி இருப்பான்?

முன்னாள் துணை முதலமைச்சரும் திமுகவின் முக்கிய தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் சட்டவிரோதமாக சாலை மறியல் மற்றும் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்ட மேயர் பிரியா உட்பட 1,000-க்கும் மேற்பட்ட திமுக…

dmk violence

முன்னாள் துணை முதலமைச்சரும் திமுகவின் முக்கிய தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் சட்டவிரோதமாக சாலை மறியல் மற்றும் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்ட மேயர் பிரியா உட்பட 1,000-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மீது காவல் துறை அதிரடியாக வழக்குகளை பதிவு செய்துள்ளது.

தஞ்சாவூர் நகர் கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இக்கைது நடவடிக்கையை கண்டித்து திமுகவினர் தலைநகர் சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலையும் பொதுமக்களுக்கு இடையூறையும் ஏற்படுத்தும் வகையில் போர்க்கொடி உயர்த்தினர்.

சென்னை நகரின் நீலாங்கரை, போரூர், கொளத்தூர், ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் திமுகவினர் திரண்டு தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். காவல்துறை அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறிய போராட்டக்காரர்கள், உதயநிதி ஸ்டாலினை கொண்டு சென்ற காவல் வாகனத்தை மறித்து சட்டத்தை கையில் எடுக்க முயன்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும், அவசர ஊர்திகள் செல்ல முடியாதவாறும் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது.

சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், போராட்டக்காரர்களை கலைக்கவும் முயன்ற காவல் துறையினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதில், இரண்டு உதவி ஆய்வாளர்கள், நான்கு பெண் காவலர்கள் மற்றும் ஒரு தலைமைக்காவலர் என மொத்தம் ஏழு காவல் துறையினர் காயமடைந்தனர். காயமடைந்த காவலர்கள் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட போராடும் அரசு ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட ஆறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.டி. சேகர் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் ஓட்டேரி, வியாசர்பாடி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோத சாலை மறியல்களை முன்னின்று நடத்தியதற்காகப்பெயர் குறிப்பிடப்பட்டு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேயர் பதவி வகிக்கும் ஒருவரே சட்ட மீறலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

போராட்டத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கைது செய்யப்பட்ட திமுகவினர் தற்காலிகமாக தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், காவல் துறையினர் மீதான தாக்குதல் மற்றும் சட்டவிரோச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த வழக்குப்பதிவுகள் அமைந்துள்ளன.

முன்னதாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உதயநிதி ஸ்டாலின், பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும், ஒரு அரசியல் தலைவரின் கைதுக்காக நகரின் ஒட்டுமொத்த போக்குவரத்தையும் முடக்கி, பெண் காவலர்கள் உட்பட அரசு ஊழியர்களைத் தாக்கிய திமுகவினரின் இந்த வன்முறைப்போக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. சென்னை காவல் துறை தரப்பில் இதுபோன்று சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.