ஒருகாலத்தில் விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்த காவேரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் நாள் தான் இந்த ஆடிப்பெருக்கு. அன்று பெருக்கெடுத்து ஓடிவரும் காவேரி அன்னையை விவசாயிகள் வரவேற்பார்கள். ஆடி பெருக்கு அன்று கிராமங்களில் முளைகொட்டு என்று சொல்லக்கூடிய முளைப்பாரியை வளர்த்து அதைக் காவேரிக்குக் கொண்டு போய் செலுத்தி நன்றி தெரிவிக்கக்கூடிய நாளாகவும் கொண்டாடிருக்காங்க.
புதுசா கல்யாணம் ஆனவங்க ஆடி 18ஐ எதிர்பார்த்து காத்துக்கிட்டே இருப்பாங்க. நான் தாலி பெருக்கி போட மறந்துட்டேன். அதுக்கு ஒரு நல்ல நாளே அமையல. மாப்பிள்ளைக்கு லீவு கிடைக்கல. எப்ப பண்றதுன்னு தெரியாம யோசிக்கிறவங்களும் இந்த நாளில் தாராளமாக தாலி பெருக்கி போடலாம்.
அதே மாதிரி கயிறு மாத்திக்கணும்கறவங்களும் இந்த நாளில் மாத்திக்கலாம். ஆடி 18 எந்தக் கிழமையில வந்தாலும் அதைப் பத்திக் கவலையே பட வேண்டாம். தாராளமாக தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். கயிறு மாத்தலன்னா கூட சரடை மட்டும் கழுத்துல கட்டிட்டு தாலியை அப்படியே கழட்டி வச்சு படைச்சிட்டு, பெரியவங்க கையால மாட்டிக்கிறதுங்கற ஒரு வழக்கமும் இருந்தது.
ஏன்னா இது பெருக்கான நாள். எப்பவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாள். அதனால இந்த நாளில் இப்படி ஒரு வழக்கத்தை பெரியவங்க வச்சிருந்தாங்க. அதனால இன்னைக்கும் காவேரி கரைக்குப் போய் மங்களகரமான பொருள்களை வச்சு காவேரியை வழிபாடு பண்ணிட்டு தங்களுடைய பழைய தாலியை புது கயிறுல மாத்துவாங்க. இல்லன்னா அப்படியே கழட்டி வச்சு வழிபாடு பண்ணிட்டு அங்கே இருக்குற பெரியவங்க கையால அதை வாங்கி மாட்டிக்கிட்டு வீட்டுக்கு வருவாங்க. அப்படி ஒரு வழக்கம் இருக்கு.
வீட்டுலயே இருந்தும் இதை செய்து கொள்ளலாம். கர்ப்பமா இருக்குறவங்க செய்ய வேண்டாம். தாலிக்கயிறு மாற்றிக்க இன்று காலைப்பொழுதில் செய்வதுதான் விசேஷம். இன்று காலையில் (3.8.2026) 9.15 மணி முதல் 10.20 மணிக்குள் தாலிக்கயிறை மாற்றிக் கொள்ளலாம். மதியம் 12.30 மணி முதல் 1.30மணி வரை இலை போட்டு படையல் செய்து வழிபடலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



