ஆடிப்பெருக்கை நாம ஏன் கொண்டாடுகிறோம்? அடடே இதுல இவ்ளோ காரணம் இருக்கா?

ஆடி 18 ரொம்ப விசேஷமான நாள். ஆடிப்பெருக்காக நாம் கொண்டாடி வருகிறோம். இது பொதுவாகக் காவேரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் நாள். காவேரி அன்னைக்கு நாம் நன்றி தெரிவித்து எங்களை வளமாக்க வரக்கூடிய அந்த…

ஆடி 18 ரொம்ப விசேஷமான நாள். ஆடிப்பெருக்காக நாம் கொண்டாடி வருகிறோம். இது பொதுவாகக் காவேரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் நாள். காவேரி அன்னைக்கு நாம் நன்றி தெரிவித்து எங்களை வளமாக்க வரக்கூடிய அந்த அன்னையை வரவேற்று அவளைக் கொண்டாடி மகிழக்கூடிய ஒரு உன்னதமான நாள்.

அதுமட்டுமல்ல. இது ஒரு பெருக்கான நாள். அதனால மங்களகரமான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் இந்த நாள்ல நாம துவங்கலாம். விடிந்தால் ஆடிப்பெருக்கு. ஆம். ஆக.3ம் தேதி (நாளை) இந்த ஆண்டு வருகிறது. இதை எப்படி கொண்டாடுவதுன்னு பார்க்கலாம்.

எது வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை ஒரு நல்ல நாள் பார்த்து தான் துவங்குவோம். பொதுவாக ஒரு விஷயத்தைத் தொடங்கணும்னா ஒரு முகூர்த்த நாள் பார்ப்போம். அது நம்முடைய ராசிக்கு நம்ம கணவன் மனைவி ராசிக்கு நல்லாருக்கா இதை எல்லாம் பார்த்து ஒரு விஷயத்தை ஆரம்பிப்போம். ஆனால் ஆடி 18 அப்படி இல்ல.

எனக்கு ராசி தெரியாது. நட்சத்திரம் தெரியாது. நான் என்னைக்கு பொறந்தேன்னு தெரியாது. எனக்கு ஜாதகமே கிடையாது. எனக்கு நல்ல நாளே யாரும் பார்க்க மாட்டாங்க. இப்படி எல்லாம் புலம்புறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க யாருமே கவலையே படாம எந்த நல்ல நாளும் பார்க்காம ஒரு நாள்ல எல்லா நல்லதையும் ஆரம்பிக்கலாம்னா அது ஆடி 18 தான்.

கடை, வியாபாரம் உள்பட எவை எல்லாம் நம் வாழ்க்கைக்கு வளம் தரக்கூடியதோ, நலம் தரக்கூடியதோ அது எதுவாக இருந்தாலும் அதைத் துவங்கிக் கொள்ளலாம். புதிய தொழில்கள், வியாபாரங்கள், வேலைகள் என எல்லாவற்றையும் இந்த நாளில் துவங்கலாம். இந்த நாள் அம்பிகையை நாம் நினைத்து வழிபடக்கூடிய நாள்.

அதாவது காவேரி அன்னையை அம்பிகையாக நினைத்து வழிபட வேண்டிய நாள். ஏன்னா அவள் தான் நமக்குக் கடவுளாக இருந்து ஒரு காலத்தில் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையாக இருக்கக்கூடிய விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கு உறுதுணையாக இருந்தவள் அந்த காவேரி மாதா தான்.

அதனால காவேரி தங்களை வந்து அடைகின்ற இந்த காலத்தில் அவளை கொண்டாடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நாள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.