தமிழக அரசியலில் நடிகர் விஜய் கால் பதித்த நாள் முதல், அவரைப் பற்றியும் அவரது அரசியல் பயணம் குறித்தும் எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களாக வலம் வரும் கூலிகளும் பல்வேறு அவதூறுகளையும் எதிர்மறையான கணிப்புகளையும் மட்டுமே முன்வைத்து வந்தனர். “விஜயால் கட்சி தொடங்கவே முடியாது; அப்படியே தொடங்கினாலும் அதைத் திறம்பட நடத்த முடியாது” என்று எள்ளி நகையாடினர். ஆனால், அவர்களின் இந்தச் சிறுபிள்ளைத் தனமான கணிப்புகளைத் தகர்த்துத் தவெக கட்சியைப் பிரம்மாண்டமாகத் தொடங்கி, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அதைக் கொண்டு சேர்த்து அனைவரையும் மிரள வைத்தார் விஜய். அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாதவர் என்று விமர்சித்தவர்களின் வாயை அடைக்கும் விதமாகத் தனது அரசியல் நகர்வுகளை மிகத் துல்லியமாக முன்னெடுத்து வருகிறார்.
அடுத்து, “234 தொகுதிகளிலும் போட்டியிடக் கூட ஆள் கிடைக்காது, மீறி நிறுத்தினால் அந்த வேட்பாளர்கள் அனைவரும் விலைக்குப் போய்விடுவார்கள்” என்று எதிர்க்கட்சிகள் மட்டமான கணக்குப் போட்டன. ஆனால், அனைத்துத் தொகுதிகளிலும் பலத்த போட்டியாளர்களை நிறுத்தி, ஒருவர்கூடக் கட்சியை விட்டு விலகாதவாறு வியூகம் அமைத்து அவர்களின் சதித் திட்டங்களைத் நிலைகுலையச் செய்தார் விஜய். “ரசிகர்கள் கூட்டம் வேறு, ஓட்டு வங்கி வேறு; கூட்டம் அலைமோதினாலும் அது வாக்குகளாக மாறாது” என்று அலட்சியப்படுத்தியவர்களுக்குத் தேர்தல் முடிவுகள் மரண அடி கொடுத்தன. ஆரம்பத்தில் பத்து முதல் பன்னிரெண்டு சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று குறைத்து மதிப்பிட்டவர்கள், விஜய் முப்பத்தைந்து சதவீத வாக்குகளை அள்ளிக் குவித்ததைக் கண்டு செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றனர்.
தேர்தல் வெற்றியைத் தாண்டி, “அவரால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சியைத் தாக்குப்பிடிக்கவே முடியாது, சில மாதங்களிலேயே கவிழ்ந்துவிடும்” என்று கூச்சலிட்டனர். ஆனால், பதவியேற்ற வெறும் குறுகிய காலத்தில் அவர் செய்த அதிரடியான மக்கள் நலச் சாதனைகள் மூலம், தனது அரசியல் பலத்தையும் நிர்வாகத் திறமையையும் நிரூபித்துக் காட்டியுள்ளார். லஞ்சத்தையும் ஊழலையும் தமிழ்நாட்டிலிருந்து வேரோடு ஒழிக்க முடியாது என்று சவால் விட்டோரின் முகத்தில் கரியைப் பூசும் வகையில், முந்தைய அரசுகளின் ஊழல் கட்டமைப்புகளைச் சிதைக்கும் துணிச்சலான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு எடுத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று பட்டியலிட்டார்களோ, அதையெல்லாம் வரிசையாகச் செய்து காட்டி அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் விஜய்.
சமீபத்தில் கூட, “விஜயால் காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் பெற முடியாது; அது அவருக்கு எட்டாக் கனி” என்று ஏளனம் பேசினார்கள். ஆனால், தனது சரியான இராஜதந்திர நகர்வுகள் மற்றும் மக்கள் சக்தியின் மூலம் அதையும் சாதித்துக் காட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் விவசாயிகளின் நலனைக் காக்க அவர் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் மூலம், வெறும் மேடைப் பேச்சாளர் அல்லாமல் செயலில் இறங்கும் ஒரு உண்மையான மக்கள் தலைவர் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஒவ்வொரு முறையும் விஜய் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களும், கட்டவிழ்த்துவிடும் அவதூறுகளும் அவருக்கு எதிராகத் திரும்புவதற்குப் பதிலாக, அவரது செல்வாக்கைத் தாறுமாறாக உயர்த்தும் ஏணிப்படிகளாக மாறி வருதை அந்த அரசியல் கூலிகளால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை.
விஜய் மீது தொடர்ச்சியாக வன்மத்தைக் கக்கி, அவர் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளவர்களின் முகமூடிகள் இப்போது கிழித்தெறியப்பட்டுள்ளன. எதைச் சொன்னாலும் அதை எதிர்மறையாகப் பேசி மக்களின் திசையை மாற்றப் பார்த்தவர்களின் சுயரூபத்தை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அவதூறு பரப்புபவர்கள் தங்களின் சதிவேலைகளைத் தொடர்ந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் மக்கள் நலப் பணிகளிலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களிலும் மட்டுமே விஜய் முழு மூச்சுடன் கவனம் செலுத்தி வருகிறார். அவரைத் தடுத்து நிறுத்த முயலும் ஒவ்வொரு முறையும் அவர் இன்னும் பலமடைந்து எழுந்து வருவதை வரலாறு கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைச் சாதனைகளாக மாற்றிடத் தெரிந்த ஒரே தலைவர் விஜய் மட்டுமே என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஆமோதித்து வருகின்றனர். அவர் மீது எழும்பும் ஒவ்வொரு அவதூறுக் கல்லும் அவர் மாளிகை கட்டுவதற்குக் கற்களாக மாறுவதை உணராத அரசியல் எதிரிகள், இன்னும் தங்களின் பழைய மலிவான அரசியலையே தொடர்கிறார்கள். தன்மீதான விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதிலடி கொடுக்காமல், தனது உழைப்பாலும் மக்கள் சேவையாலும் மட்டுமே பதிலடி கொடுத்து வரும் விஜயின் பயணம் தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது. மக்கள் அனைவரும் விஜயின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் இந்த வேளையில், அவதூறு பரப்புவோர் காலப்போக்கில் காணாமல் போவது உறுதி என்றே பொதுமக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
