தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கும் துயரமும், அதையொட்டிய அரசியல் நாடகங்களும் இன்றும் தீர்க்க முடியாத ஒரு புதிராகவே தொடர்கின்றன. தமிழ்நாட்டிற்கான உரிமையை மீட்டுத் தருவதில் காவிரி மேலாண்மை ஆணையமும் சரி, உச்ச நீதிமன்றமும் சரி, மத்திய அரசும் சரி, உரிமையை மறுக்கும் கர்நாடக அரசும் சரி, இதுவரை எப்போதுமே முழுமையாகக் கைகொடுத்தது கிடையாது என்பதுதான் மறுக்க முடியாத வரலாற்று உண்Gமையாகும். தசாப்தங்களாகத் தொடரும் இந்த அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்காலும், அரசியல் பித்தலாட்டங்களாலும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலக் கொடுமைகளையும் தண்ணீர் தட்டுப்பாட்டையும் சந்தித்துத் தவித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், சட்டப் போராட்டங்களையும் காகித உத்தரவுகளையும் தாண்டி, இயற்கையின் கருணையான வருண பகவான் மட்டுமே ஒவ்வொரு ஆண்டிலும் தமிழ்நாட்டைக் கைதூக்கிவிட்டுத் தண்ணீரை வழங்கி வருகிறார். வழக்கம்போல இந்த ஆண்டும் மழை பொய்த்துப் போய்விடும் என்றும், கர்நாடக அரசு ஒரு துளி தண்ணீர் கூடத் திறக்காது என்றும் கணக்குப் போட்டுக் கொண்டு, அதைக் கொண்டு தங்களின் அரசியல் லாபத்தைப் பார்த்துவிடலாம் என்று பதுங்கியிருந்த பல எதிர்க்கட்சிகளுக்கும் அரசியல் வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு இயற்கையின் மழையும் சரியான நேரத்துக்கான அரசியல் நகர்வுகளும் பெரும் பேரிடியாக விழுந்துள்ளன.
கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதும், டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு நீர் கிடைக்கப் போவதும் விவசாயிகளையும் பொதுமக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், தங்களின் சுயநல அரசியல் கணக்குகள் தடம் புரண்டுவிட்டதே என்ற ஆத்திரத்தில், டெல்டா மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களே, விவசாயிகள் சந்தோஷமாகப் பயிர் செய்கிறார்களே என்ற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாமல் அரசியல் கட்சிகள் புலம்பித் தள்ளி வருவது அப்பட்டமான வெட்கக்கேடாகும். எல்லாவற்றிலும் அரசியல் லாபத்தைத் தேடும் இந்த மலிவான போக்கினால்தான் தமிழ்நாட்டின் பாரம்பரியமும் விவசாயமும் பல ஆண்டுகளாக நசுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய துயரமான மற்றும் சுயநல அரசியல் சூழலில்தான், தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் திசையையும் மாற்றி அமைக்கும் ஒளியாக முதல்வர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். அன்றாடம் நடக்கும் அரசியல் நாடகங்களையும், மக்களின் முதுகில் குத்தும் சூழ்ச்சிகளையும் துணிச்சலாக உடைத்தெறிந்து, திரைக்குப் பின்னால் வலிமையான தூதரக மற்றும் அரசியல் முயற்சிகளை முன்னெடுத்து காவிரி நீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தரும் அசாத்தியமான பணியைச் செய்து காட்டியுள்ளார். எந்தவொரு விளம்பரமும் இல்லாமல், மக்களின் உண்மையான நலனுக்காகவும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த தமிழ்நாட்டை மீட்கவே முதல்வர் விஜய் ஆன்மிக மற்றும் மக்கள் சேவை அரசியலைத் தொடங்கியுள்ளார் என்பதை இந்த ஒரு நிகழ்வு நாடறியச் செய்துள்ளது. முந்தைய தலைவர்கள் செய்த தவற்றைத் திருத்தி, அதிகாரத்தை மக்களுக்காகப் பயன்படுத்தும் ஒரு புதிய சகாப்தத்தை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். காவிரி நீரை வைத்து அரசியல் செய்யத் துடித்தவர்களின் முகமூடிகள் கிழித்தெறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடும் ஒரு உண்மையான தலைவர் கிடைத்திருப்பது மாநிலத்தின் மிகப்பெரிய பாக்கியமாகும்.
விஜய் மட்டும் அரசியலுக்கு வராமலும், இந்தத் துணிச்சலான மாற்றத்தைக் கொண்டு வராமலும் இருந்திருந்தால், தமிழ்நாட்டின் நிலைமை இன்னும் எவ்வளவு மோசமாகப் போயிருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சுயநலக் கூட்டத்தின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட தமிழகம் இப்போது உண்மையான வளர்ச்சியையும் நிம்மதியையும் நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது. இயற்கையின் அருளையும், மக்கள் தலைவனின் தீர்க்கமான பார்வையையும் இணைத்துச் செல்லும் இந்த புதிய ஆட்சியில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டிற்கு எந்தத் தீங்கும் நெருங்க முடியாது என்பதும், காவிரி உரிமை எப்போதும் காப்பாற்றப்படும் என்பதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
