சப்ஸ்டியூட்ட்டா ரெண்டு பேட்ஸ்மேன்களை இறக்கிவிடுது பாஜக.. ஒன்னு அண்ணாமலை இன்னொன்னு தனுஷ்.. ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் செஞ்சுரி அடிச்சா ஜெயிக்கலாம், இல்லைன்னா பாத்துக்கிடலாம்.. ஆனால் முதலமைச்சர் விஜய் என்கிற ஃபாஸ்ட் பவுலரிடம் ரெண்டு பேருமே டக் அவுட் ஆகிருவாங்கன்னு பாஜகவுக்கு இன்னும் புரியலை..

தமிழக அரசியல் களத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தற்போது கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளன. “வந்தால் மாங்காய், போனால் வெறும் கல்லுதானே” என்ற கணக்கின்படி, ஒரே நேரத்தில் பல வியூகங்களை வகுத்து காய்களை நகர்த்தி…

annamalai dhanush

தமிழக அரசியல் களத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தற்போது கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளன. “வந்தால் மாங்காய், போனால் வெறும் கல்லுதானே” என்ற கணக்கின்படி, ஒரே நேரத்தில் பல வியூகங்களை வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது தேசியக் கட்சி. எப்பேர்ப்பட்ட அரசியல் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் அந்தக் கட்சி, இந்த முறை தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த உத்தியின் முதல் கட்டமாகத்தான் அண்ணாமலையை ஒரு தனி இயக்கம்போல செயல்பட வைத்து, அவருக்கும் பாஜகவுக்கும் எந்த நேரடியான சம்பந்தமும் இல்லை போன்றதொரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சிகள் நடப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் எவ்விதத் தயக்கமுமின்றி அவர் தனி ஆவர்த்தனம் செய்து, தமிழகத்தில் கட்சிக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தலாம் என்பதே அந்த வியூகத்தின் அடிப்படையாக உள்ளது.

இத்தகைய அரசியல் கணக்குகளுக்கு மத்தியில், ‘பிளான் பி’ என்ற மாற்று ஏற்பாட்டையும் பாஜக கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே பிரபல நடிகர் தனுஷை அரசியல் களத்தில் இறக்கிவிடத் திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் பேசப்படுகின்றன. தனுஷுக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் பரந்த ரசிகர் பட்டாளத்தை முழுமையாகத் தன் பக்கம் திருப்பி, அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் கனவிலும் பாஜக தரப்பு தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படியாக ஒரே மாமரத்தில் இரண்டு கற்களை எறிவதுபோல, அண்ணாமலை மற்றும் தனுஷ் என்ற இரண்டு வெவ்வேறு முகங்களை அரசியல் களத்தில் ஒரே நேரத்தில் பரிசோதித்துப் பார்க்கிறது பாஜக. மாங்காய் விழுந்தால் லாபம், இல்லையென்றால் எறிந்த கல்லுதானே இழப்பு என்ற மனநிலையில்தான் இந்தத் தந்திரமான நகர்வுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், தற்போதைய அரசியல் யதார்த்தம் என்னவென்றால், அவர்கள் எறியும் இந்த இரண்டு கற்களுமே தமிழக அரசியல் சூழலில் எடுபடாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது அசுர பலத்துடன் எழுந்து நின்றுகொண்டிருக்கும் விஜய் என்ற மாபெரும் அரசியல் சக்தியையும், அவரது மக்கள் திரள் பலத்தையும் எதிர்கொள்வது இந்தச் சின்னக் கற்களுக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்றே தெரிகிறது.

களமிறக்கப்படும் இந்தத் தந்திரமான திட்டங்கள் அனைத்தும், தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள விஜயின் அந்தப் பாறாங்கல்லின் மீது மோதும் போது சுக்குநூறாக நொறுங்கிப் போவதுதான் மறுக்க முடியாத உண்மையாக இருக்கப் போகிறது. மக்களின் ஆதரவைக் கைப்பற்றத் துடிக்கும் எத்தனையோ கணக்குகள் இங்குத் தோற்றுப்போயுள்ள நிலையில், பாஜகவின் இந்த இரட்டைத் தந்திரமும் இறுதியில் வெறும் ஏமாற்றத்தையே தழுவப் போகிறது.