இன்று ஆடித்தபசு… அம்பாளை இப்படி வேண்டுங்க… ஆச்சரிய பலன் கிடைக்கும்!

சங்கரன் கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு காலம் ரொம்ப ரொம்ப விசேஷம். அம்பாள் தவம் செய்யக்கூடிய காலம். அப்போது ரொம்ப அமைதியா, ஆனந்தமா அம்பாள் தனக்கு வெற்றி கிடைத்தது என்பதை எப்படி மகிழ்ச்சியா கொண்டாடி அந்த…

சங்கரன் கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு காலம் ரொம்ப ரொம்ப விசேஷம். அம்பாள் தவம் செய்யக்கூடிய காலம். அப்போது ரொம்ப அமைதியா, ஆனந்தமா அம்பாள் தனக்கு வெற்றி கிடைத்தது என்பதை எப்படி மகிழ்ச்சியா கொண்டாடி அந்த அம்பாள் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள். அதனால் அந்தக் காலத்தில் நாம் அம்பாளை வழிபாடு செய்வதால் மிக அதீதமான நலன்களைப் பெற முடியும்.

அதனால்தான் இந்த ஆடித்தபசை நமக்கு நல்ல விரதநாளாக சொல்லி இருக்காங்க. ஊசி முனையில் தவம் மேற்கொண்ட அம்பிகை பெற்ற வெற்றி, மகிழ்ச்சி என்ன? இறைவனைத் தரிசனம் செய்வது. இதே காட்சியை உலக உயிர்கள் எல்லாம் பெறணும்னு பிரார்த்தனை செய்ததால்தான் இன்றும் நாம் சங்கரநாராயணரை வழிபட்டு வருகிறோம்.

இதற்கு காரணம் கோமதி அம்பிகை. அப்படின்னா இந்த நாளில் அந்த அம்பிகையை மிகச்சிறப்பாக வழிபட்டு பிரார்த்தனை செய்யலாம். இந்த நாளில் வழிபடுவதால் என்ன பலன் கிடைக்கும்? நிறைய பேர் வாழ்க்கையில சில விஷயத்துல வெற்றி கிடைக்காமல் போராடிக்கிட்டே இருப்பாங்க.

வேலை, திருமணம்னு முயற்சி செய்து கைகூடலன்னா, இந்த நாளில் அம்பிகையை வழிபட்டுப் பாருங்க. கண்டிப்பாக உங்க கடுமையான முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். அதனால் யாரெல்லாம் கடுமையாக போராடுறாங்க, அப்படிங்கறதை அம்பாள் தெரிந்து கொண்டு அவர்களுக்கு அருள் செய்யக்கூடிய நாளாகவும் இந்த ஆடித்தபசு விளங்குகிறது.

ஆடித்தபசு சங்கரன்கோவிலில் இந்த ஆண்டு 28ம் தேதியே கொண்டாடப்படுகிறது. இரவில் பௌர்ணமி அமைந்துள்ளதால் அன்றைய தினமே கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி 28ம் தேதி இரவு 7.33 மணி முதல் மறுநாள் இரவு 8.58 மணி வரை உள்ளது. சங்கரன்கோவில் முறைப்படி ஆடித்தபசு கடைபிடிப்பவர்கள் 28ம் தேதி விரத வழிபாட்டை வைத்துக் கொள்ளலாம்.

உங்க ஊர்ல 29ம் தேதி கொண்டாடினால் அன்றைய நாள் ஆடித்தபசு வழிபாட்டை வைத்துக் கொள்ளலாம். அன்றைய நாளில் காலையில் இருந்தே உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் அவரவர் வசதிக்கேற்ப உபவாசம் இருக்கலாம். அம்பிகைக்கு வாசனையான மலர்கள், எளிமையான நைவேத்தியம் வைத்துக் கொள்ளலாம்.

அபிராமி அந்தாதியை முழுமையாக பொறுமையா படிங்க. பல காலமாக உங்களுக்கு நிறைவேறாத விஷயத்துக்காக பிரார்த்தனை பண்ணுங்க. அம்பாளை வேண்டுங்க. எனக்கு இதுல வெற்றி வேணும்னு திரும்ப திரும்ப அம்பாளிடம் சொல்லுங்க. நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.