அண்ணன் வரார் வழிவிடு!.. ஜனநாயகன் புது போஸ்டர்!. ரிலீஸ் எப்போ?..

விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடித்த கடைசி திரைப்படமாகும். கடந்த ஜனவரி 9ம் தேதி படத்தின்…

jananayagan

விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடித்த கடைசி திரைப்படமாகும். கடந்த ஜனவரி 9ம் தேதி படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழை கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. ஆனால் அங்கும் தாமதமாகவே ஒரு கட்டத்தில் வழக்கை வாபஸ் பெற்றடு மறு தணிக்கைக்கும் விண்ணப்பித்தார். ஆனால் நான்கு மாதங்களாகியும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது..

jananayagan

கடந்த சில நாட்களாகவே படத்திற்கு சான்றிதழ் விரைவில் கிடைத்துவிடும் என செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கிறது, இந்நிலையில்தான் நடிகர் விஜயின் சமூகவலைத்தள பக்கங்களில் ஜனநாயகனின் புதிய போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதோடு விரைவில் வருகிறோம் என கேவிஎன் நிறுவனமும் பதிவிட்டிருக்கிறது.  அனேகமாக ஜனநாயகன் வருகிற 24ம் தேதி வெளியாகலாம் என கணிக்கப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் கிடைத்தவுடன் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளது.