தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளின் ஆரம்பகட்ட முடிவுகள் மாநிலம் முழுவதும் பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. ஒட்டுமொத்த முன்னிலை நிலவரப்படி, திமுக 55 இடங்களில் முன்னிலை பெற்று தனது பலத்தை நிரூபித்து வருகிறது. ஆச்சரியப்படும் விதமாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 32 இடங்களிலும் முதல்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் 29 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
நட்சத்திரத் தொகுதிகளில் அமைச்சர்கள் பின்னடைவைச் சந்திப்பது ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பின்னடைவைச் சந்திக்க, அங்கு தவெக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் திமுக முதலிடத்திலும், தவெக இரண்டாம் இடத்திலும் இருக்க, அதிமுக 3-ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதேபோல், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்; அங்கு தவெக வேட்பாளர் பிரபு முன்னிலை வகிக்கிறார்.
தென் தமிழகத்தில், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தபால் வாக்குகளில் பின்னடைவில் உள்ளார். வானதி சீனிவாசன் பின்னடைவு, தவெக வேட்பாளர் முன்னிலை.. சோழிங்கநல்லூரில் தவெக வேட்பாளர் சரவணன் முன்னிலை.. சைதாப்பேட்டையில் மா சுப்பிரமணியன் பின்னடைவு.. அங்கு தவெக முன்னிலை…
தேர்தல் முடிவுகள் 2026, திமுக முன்னிலை, தவெக 28 இடங்கள், அமைச்சர் அன்பரசன் பின்னடைவு, சீமான் பின்னடைவு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிலவரம், தமிழக அரசியல் அதிரடி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
