தமிழக அரசியலில் விஜய் மூன்றாவது சக்தி இல்லை.. முதல் சக்தி.. விஜய்யை இளக்காரமாக நினைத்தவர்கள் தாமதமாக புரிந்து கொண்டார்கள்.. கடைசி 4 நாட்களில் டோட்டலாக எல்லாமே மாறிவிட்டது.. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கூட திமுகவை தோற்கடிக்க முடிந்ததே தவிர, அழிக்க முடியவில்லை.. ஆனால் விஜய் அதை செய்துவிடுவாரோ என தோன்றுகிறது.. தேர்தல் வியூக வல்லுனர்கள்..

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய இளைஞர்களின் வாக்கு வங்கி எந்த பக்கம் சாய்கிறது என்பதுதான் 2026 தேர்தலின் தலையெழுத்தைதீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் முதல்வர் மு.க. ஸ்டாலினை…

tvk vijay 3

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய இளைஞர்களின் வாக்கு வங்கி எந்த பக்கம் சாய்கிறது என்பதுதான் 2026 தேர்தலின் தலையெழுத்தைதீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் முதல்வர் மு.க. ஸ்டாலினை விட, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பக்கமே அதிக ஈர்ப்பை கொண்டிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ குரலாக ஒலிக்கும் ஊடகங்களே, விஜய்யின் கட்சிக்கு 25 சதவீத வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூற தொடங்கியிருப்பது, திரைமறைவில் ஏதோ ஒரு அசாதாரணமான அரசியல் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. இது விஜய்யின் அரசியல் பலத்தை நாம் இதுவரை குறைத்து மதிப்பிட்டுவிட்டோமோ என்ற கேள்வியை அரசியல் ஆய்வாளர்களிடையே வலுவாக எழுப்பியுள்ளது.

விஜய் வெறும் திரை பிம்பத்தை மட்டும் வைத்து அரசியல் செய்யவில்லை, மாறாக அவர் ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியை மௌனமாக திரட்டி வைத்து இருக்கிறார் என்பதை பலரும் தேர்தலுக்கு பின்னர் தான் உணர தொடங்கியுள்ளனர். “விஜய்யால் என்ன செய்துவிட முடியும்?” என்று ஏளனமாப் பேசியவர்கள் கூட, தற்போது அவருடைய அரசியல் நகர்வுகளையும், மக்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கையும் கண்டு திகைத்து போயுள்ளனர். பாரம்பரியக் கட்சிகளின் வாக்கு வங்கியை, குறிப்பாக ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியை குறிவைத்து விஜய் களம் இறங்கியிருப்பது இப்போதுதான் பலருக்கு தெளிவாக தெரிகிறது.

திமுகவின் கோட்டை என்று கருதப்படும் பகுதிகள் மற்றும் அந்த இயக்கத்தின் பலமாக இருக்கும் இளைஞர் அணிகளில் விஜய் ஒரு பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளார். திராவிட மாடல் மற்றும் நீண்ட கால அரசியல் பாரம்பரியம் பேசும் திமுகவிற்கு, விஜய்யின் இந்த திடீர் வளர்ச்சி ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 25 – 40 சதவீத வாக்குகள் என்பது ஒரு சாதாரண எண்ணிக்கை அல்ல; அது ஆட்சி கட்டிலையே தீர்மானிக்கக்கூடிய ஒரு சக்தி. ஒரு கட்சியின் ஆதரவு ஊடகங்களே இந்த தகவலைக் கசியவிடுகின்றன என்றால், கள நிலவரம் அவர்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். விஜய்யின் அரசியல் சாத்தியக்கூறுகள் பலரும் நினைத்ததை விட மிக அதிகமாக இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

இளைஞர்கள் மத்தியில் நிலவும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் ஒரு மாற்றத்திற்கான தேடல் ஆகியவற்றை விஜய் மிகச்சரியாக பயன்படுத்தி உள்ளார். நீண்ட காலமாகச் சுழற்சி முறையில் ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதுமுகம், அதுவும் இளைஞர்களால் ஆராதிக்கப்படும் ஒரு கலைஞர் வரும்போது, அந்த ஈர்ப்பு இயல்பாகவே வாக்குகளாக மாறுகிறது. முதல்வர் ஸ்டாலினின் அனுபவ அரசியலை விட, விஜய்யின் புதிய அரசியல் முழக்கங்கள் இளைஞர்களை கவர்ந்துள்ளதை மறுக்க முடியாது. இது வெறும் உணர்ச்சிகரமான ஆதரவு மட்டுமல்ல, ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியின் வெளிப்பாடாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

இறுதியாக, 2026 தேர்தல் முடிவு என்பது அனுபவத்திற்கும் எழுச்சிக்கும் இடையிலான ஒரு போராட்டமாக இருக்கப்போகிறது. விஜய்யின் வருகை என்பது ஒரு மூன்றாம் தரப்பு சக்தியாக இல்லாமல், முதன்மையான போட்டியாளராக உருவெடுத்துள்ளது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலையும் நிலைகுலைய செய்துள்ளது. புள்ளிவிவரங்களை கடந்தும், ஊடக கணிப்புகளை கடந்தும் விஜய்க்கு இருக்கும் அந்த ‘மாஸ்’ செல்வாக்கு வாக்குகளாக பதிவாகி இருக்கும் பட்சத்தில், தமிழக அரசியல் வரலாறு மீண்டும் ஒருமுறை மாற்றி எழுதப்படும். கணிக்க முடியாத வேகத்தில் விஜய் வளருவதும், பாரம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கிகள் சரிவதும் தற்கால அரசியலின் தவிர்க்க முடியாத உண்மைகளாக மாறியுள்ளன.