தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு போனாதான் அரசியல்னு நீங்க நினைக்கிறீங்க… ஆனா குறைவான இடத்துல பிரச்சாரம் பண்ணி மொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வச்சிட்டாரு விஜய்.. எண்ணிக்கை முக்கியம் இல்லை… நாங்க நின்ன இடத்துல ஏற்பட்ட ‘எண்ணம்’ தான் முக்கியம். நாங்க ரத்து பண்ணது பிரசாரத்தை மட்டும்தான், வெற்றியை இல்லை!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இதுவரை கண்டிராத பல வினோதங்களையும் ஆச்சரியங்களையும் நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுகவின் பிரம்மாண்டமான பிரச்சார உத்திகள் இந்த முறை எதிர்பார்த்த அளவு…

stalin eps seeman vijay

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இதுவரை கண்டிராத பல வினோதங்களையும் ஆச்சரியங்களையும் நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுகவின் பிரம்மாண்டமான பிரச்சார உத்திகள் இந்த முறை எதிர்பார்த்த அளவு மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்ற கருத்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

கடந்த காலங்களில் திமுகவின் தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு புயலை போல ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஆக்கிரமிக்கும். ஆனால், இந்த முறை புள்ளிவிவரங்களின்படி அவர்களின் பிரச்சாரம் சுமார் 24 சதவீத மக்களை மட்டுமே சென்றடைந்திருப்பது அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நல திட்டங்களை விட தனிநபர் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மற்றும் எதிர்க்கட்சிகளின் புதிய வியூகங்களை சரியாக கணிக்க தவறியது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தத் தேர்தலின் மற்றொரு வினோதமான அம்சம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சார நடைமுறை. வழக்கமாக புதிய கட்சியை தொடங்குபவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொள்வது மரபு. ஆனால், விஜய் அவர்கள் ஒட்டுமொத்தமாக 18 இடங்களுக்கு கூட பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்பது ஆச்சரியமான தகவல். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அவர் திட்டமிட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட பிரச்சார பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதே சமயம், களத்தில் மிகத்தீவிரமாக செயல்பட்ட சீமானை ஒப்பிடும்போது விஜய்யின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டுள்ளது. சீமான் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் பேசி, ஒவ்வொரு தொகுதியின் விவரங்களையும், அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் மீதான புகார்களையும் பட்டியலிட்டார். அந்தந்த பகுதிகளில் நிலவும் உள்ளூர் பிரச்சனைகளை தனிப்பட்ட விதத்தில் கையாண்டு, ஆளும் தரப்பின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதில் அவர் மும்முரமாக இருந்தர். இத்தகைய விரிவான பிரச்சாரங்களுக்கு மத்தியில், மிகக் குறைவான இடங்களுக்கு சென்ற விஜய் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது கடைசி நேர வியூக மாற்றங்கள் என பல தகவல்கள் உலவுகின்றன. ஆனால், 18 இடங்களுக்கு மட்டுமே சென்றிருந்தாலும், அவர்சென்ற ஒவ்வொரு இடத்திலும் கூடிய கூட்டம் மற்றும் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்றவர்களின் தாக்கத்தை பெரியதாகத் தெரிந்தது. மற்ற தலைவர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய நிலையில், விஜய் அவர்கள் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் அணியின் மூலம் தனது செய்தியை வீட்டிற்கு ஒரு வாக்காளர் என்ற அடிப்படையில் கொண்டு சேர்த்திருப்பதாக தெரிகிறது.

முடிவாக, 2026 தேர்தல் பிரச்சார போர் என்பது எண்ணிக்கையையும் தரத்தையும் மையமாக கொண்டு நகர்கிறது. 170 இடங்களில் பேசி மக்கள் மனதை வெல்லும் பழைய பாணி ஒருபுறம் இருந்தாலும், மிக குறைவான இடங்களில் தோன்றி ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் புதிய பாணி மறுபுறம் உள்ளது. திமுகவின் 24 சதவீத ரீச் மற்றும் விஜய்யின் 18 இட பிரச்சாரம் ஆகிய இரண்டும் சொல்லும் செய்தி ஒன்றுதான்: தமிழக வாக்காளர்கள் இப்போது பேச்சுகளை விட செயல்பாடுகளையும், மாற்றத்திற்கான தேவையையுமே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இந்த மோதலில் அதிக இடங்களுக்கு சென்றவர்கள் வெல்வார்களா அல்லது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெல்வார்களா என்பது வாக்கு எண்ணும் நாளில் தெரிந்துவிடும்.