தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் சம்பந்தமே இல்லாமல் தான் பேசிய சில கருத்துக்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஒரு சம்பவத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிவகார்த்திகேயன் அதில் தனக்கு கிடைத்த பெயரை கொண்டு சினிமாவிலும் நடிகராக கால் பதித்திருந்தார்.
பத்தோடு பதினொன்றாக ஒரு நடிகராக இல்லாமல் தமிழ் சினிமாவில் சிறந்த கதை தேர்வு மற்றும் மக்களுக்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது என மிக குறுகிய காலத்திலேயே டாப் 10 தமிழ் நடிகர்களில் ஒருவராகவும் சிவகார்த்திகேயன் உருவெடுத்தார். தற்போது வரையிலும் சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் இன்னொரு பக்கம் நல்ல கதையம்சம் கொண்ட தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் வெற்றி தயாரிப்பாளராகவும் உள்ளார்.
இப்படி சிறந்த ஒரு பிரபலமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும் அவ்வப்போது அவருக்கு எதிராக பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து தான் வருகிறது. மற்றொரு சினிமா பிரபலத்தின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிவகார்த்திகேயன் சில தவறுகள் செய்ததாக விமர்சனங்கள் உருவாகியிருந்தது இதேபோல மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும் சம்பந்தமே இல்லாமல் விமர்சித்து வந்தனர்.
இப்படி இருக்க சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயன் சிஎஸ்கே அணியை பயங்கரமாக பெருமை பேசி இருந்தார். அவர் அப்படி பேசியதற்கு பின்னர் சிஎஸ்கே மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தது. சிவகார்த்திகேயன் பெருமையாக பேசியதால் தான் சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.
அப்படி இருக்கையில் தான் சிவகார்த்திகேயனை மீண்டும் ஒருமுறை தற்போது கடிக்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள். இதற்கும் சிஎஸ்கேவை போல ஒரு காரணம் உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்திக்கு தனது இரண்டாவது திரைப்படத்தில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்து இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த திரைப்படம் கைவிடப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஜினி படத்திலிருந்து சிபி சக்கரவர்த்தி விலகி உள்ளதாகவும், அஸ்வத் மாரிமுத்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு ஏன் சிவகார்த்திகேயனை கலாய்க்கிறார்கள் என தோன்றலாம். ஆனால் இவர் தான் ஒரு நிகழ்ச்சி மேடையில் சிபி சக்கரவர்த்தி ரஜினி படத்தை இயக்குகிறார், இனிமேல் என்னை வைத்து இயக்கமாட்டார் என்பது போல புகழ்ந்து பேசியிருந்தார்.
இதற்கிடையே, ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு சிபி சக்கரவர்த்திக்கு பறிபோக, அதற்கு SK சொன்ன வார்த்தைகள் தான் காரணம் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

