அந்த ஃபோட்டோவ குடுங்க தம்பி.. மனைவி சங்கீதாவின் முகம்.. ரசிக கூட்டத்திற்கு மத்தியிலும் விஜய் செஞ்ச விஷயம்..

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் நடித்து மக்கள் மத்தியிலும் ஹீரோவாக தடம் பதித்தவர் தான் தளபதி விஜய். சினிமாவில் இவரது திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் அது பிளாக்பஸ்டர் ரிப்போட்டாக இருக்கும்…

vijay reaction to wife sangeetha photo

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் நடித்து மக்கள் மத்தியிலும் ஹீரோவாக தடம் பதித்தவர் தான் தளபதி விஜய். சினிமாவில் இவரது திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் அது பிளாக்பஸ்டர் ரிப்போட்டாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. சினிமாவில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே தனியாளாக ஆண்ட விஜய் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தவெக என்றும் அரசியல் கட்சியை ஆரம்பித்திருந்தார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்கள் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் களமிறங்குகிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே அரசியல் களத்தில் மிகப் பரபரப்பாக ங்கி வரும் விஜய் எந்த ஊர் சென்றாலும் அவரை பார்ப்பதற்காக ஆயிரம் முதல் லட்சக்கணக்கான மக்கள் கூடி விடுகின்றனர். சமீபத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் அவரை காண மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து வந்த நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்திற்கு வந்திருக்கும் விஜய்யை காண லட்சக்கணக்கான மக்கள் தங்களது அன்பால் அரவணைத்து வரவேற்று வருகின்றனர்.

அரசியல் களத்தில் எதிர்ப்பு..

சினிமாவை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டு இனிமேல் அரசியலில் இறங்கி மக்கள் பணி செய்வது மட்டுமே தனது லட்சியம் என்றும் பல இடங்களில் விஜய் கூறிவிட்டார். ஆனால் இன்னொரு புறம் நடிகர் விஜய் நிச்சயம் திரும்பவும் திரைப்படங்களில் நடிப்பார் என்றும் அவருக்கு அரசியல் செட்டாகாது என்றும் விமர்சனங்களும் இருந்து வருகிறது.

ஆனால் விஜய்க்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு வாக்காக மாறும் பட்சத்தில் நிச்சயம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. தொடர்ந்து அவர் பல்வேறு திட்டங்களையும் தனது பிரச்சார கூட்டத்தில் அறிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளில் இருந்து அவர் மீது எதிர்ப்புகளும் குறையாமல் இல்லை. விஜய் வந்தால் தங்களது வாக்கு சதவீதம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் அப்படி பேசுவதாகவும் விஜய்யின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மனைவி சங்கீதா இருந்த போட்டோ..

இதற்கு மத்தியில் தான் நடிகர் விஜய் திருப்பூர் வந்த போது அவரது மனைவி சங்கீதாவுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் கொடுத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக விவாகரத்து கோரி வழக்கு பதிவு செய்திருந்தார். இது தொடர்பான விவரங்கள் விஜய் அரசியல் களத்தில் இறங்கிய பின்னர் வெளியாகி பெரிய சர்ச்சையை உருவாக்கி இருந்தது.

குடும்பத்திலேயே இத்தனை பிரச்சனை வைத்துக் கொண்டு இவர் எப்படி அரசியலில் ஜெயிப்பார் என்ற விமர்சனங்களும் எழுந்த நிலையில் சமீபத்தில் திருப்பூர் வந்தபோது ரசிகர் ஒருவர் விஜய் – சங்கீதா ஆகியோர் விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை நீட்டினார். இதை கவனித்த விஜய் உடனடியாக ரசிகர்களிடம் கேட்டு வாங்கிக் கொண்டதுடன் மட்டுமில்லாமல் சில நொடிகள் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்தபடி அவர் நின்ற நிகழ்வு அதிக கவனம் பெற்று வருகிறது.