விஜய்யும் இல்லை, ஸ்டாலினும் இல்லை.. எடப்பாடி தான் முதல்வர்.. அதிமுக 120 தொகுதிகள்.. என்.டி.ஏ கூட்டணி 160 தொகுதிகள்.. கூட்டணி இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கிறது அதிமுக.. பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்.. 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு.. நினைத்ததை சாதித்துவிட்டார் ஈபிஎஸ்.. இனிமேல் அவர் 10 வெற்றி பழனிசாமி.. தொண்டர்கள் உற்சாகம்..!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் அரங்கேறியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய…

edappadi

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் அரங்கேறியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய வரவான விஜய் ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வந்த நிலையில், அனைத்து கருத்துக்கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி அதிமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த தேர்தலில் திமுக ஆட்சியின் மீதான அதிருப்தி மற்றும் புதிய கட்சிகளின் வருகையால் வாக்குகள் பிரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி வகுத்த வியூகம் அதிமுகவை மீண்டும் அரியணையில் அமர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, அதிமுக தனித்து 120 தொகுதிகளில் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து தனித்து ஆட்சி அமைக்கும் தகுதியை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரு கட்சி கூட்டணி தயவின்றி ஆட்சி அமைக்கும் வரலாற்று சாதனையை எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தியுள்ளார். மறுபுறம், அதிமுக அங்கம் வகிக்கும் என்.டி.ஏ கூட்டணி ஒட்டுமொத்தமாக 160 தொகுதிகளை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத தேர்தல் பிரச்சாரமும், அடிமட்ட தொண்டர்களை ஒருங்கிணைத்த விதமுமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலூன்ற துடித்த பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தபோதிலும் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளதாகவும், அண்ணாமலை ஆதரவாளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளை தாண்டி, அவர் ஒரு திறமையான அரசியல் தலைவராக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். “எடப்பாடி தான் முதல்வர்” என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்த அதிமுக, தற்போது நினைத்ததை சாதித்துவிடும்போல் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமியின் தொடர் வெற்றிகளை கண்டு உற்சாகமிழந்திருந்த தொண்டர்களுக்கு இந்த கருத்துக்கணிப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது இனி தொடர்ந்து வெற்றி தான் என்பதை குறிக்கும் வகையில் , அவரை “10 வெற்றி பழனிசாமி” என்று சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.