கோதுமை மாவில் சப்பாத்தி, பூரி, அல்வா எனப் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம், அத்தகைய கோதுமையின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
கோதுமை மாவு இரத்தத்தினை சுத்தம் செய்வதாக உள்ளது. மேலும் கோதுமையில் உள்ள அதிக அளவு நார்ச் சத்து காரணமாக அது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் கோதுமையில் சப்பாத்தி செய்து சாப்பிட வேண்டும்.
மேலும் கோதுமையானது சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது, மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சப்பாத்தியாக மட்டுமல்லாமல், கோதுமையில் கஞ்சி, கோதுமையில் உப்புமா, கோதுமையில் தோசை என வித்தியாசமாக செய்து சாப்பிடலாம்.
மேலும் கோதுமை தானியத்தில் இருந்து பால் பிழிந்து காய்ச்சிக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். மேலும் 60 வயதினைத் தாண்டிய முதியவர்களால் சப்பாத்தி, பூரி என கடித்து சாப்பிட முடியவில்லை எனில், கோதுமைப் பாலினைக் காய்ச்சிக் கொடுக்கலாம்.
அல்லது கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.