உடல் எடை குறைப்புக்கு உதவும் கொள்ளு துவையல்…

உடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளை ரசம், சாம்பார், துவையல், சட்னி என எதாவது ஒரு ரூபத்தில் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. கொழுப்பை கரைக்க கொள்ளு மிகவும் சிறந்தது.…

உடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளை ரசம், சாம்பார், துவையல், சட்னி என எதாவது ஒரு ரூபத்தில் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. கொழுப்பை கரைக்க கொள்ளு மிகவும் சிறந்தது. இப்போது கொள்ளு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

கொள்ளு – கால் கப்

மிளகாய் வத்தல் – 3

உளுந்து – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்

புளி – சிறு துண்டு

பூண்டு – 2 பல்

தேவையான உப்பு 

செய்முறை:  கால் கப் கொள்ளை எடுத்து கொண்டு கடாயை சூடாக்கி அதில் கொள்ளைப் போட்டு நன்றாக மொறுமொறுப்பாக, வாசனை  வரும் வரைக்கும் வறுத்து கொள்ள வேண்டும். அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை காய்ந்ததும் மிளகாய் வத்தல், உளுந்து ரெண்டையும் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு வறுத்த மிளகாய், உளுந்து, கொள்ளு எல்லாம் சூடு ஆறியதும், தேங்காய்த் துருவல், சிறு துண்டு புளி, பூண்டு, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் சிறிதளவு தண்ணிவிட்டுக் கரகரப்பா அரைக்கவும். அவ்வளவு இந்த கொள்ளு, துவையல் ருசி அருமையாக இருக்கும். இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள் அருமையாக இருக்கும். உடல் எடையும் குறையும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன