இஞ்சி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் பலவற்றை நீக்கும் என நமக்கு தெரியும். இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டில் அடைஞ்சு கிடப்போர் மாலையில் பஜ்ஜி, போண்டா என எண்ணெய் பலகாரங்களை தின்று அஜீரணக்கோளாறால் அவதிப்படுபவர் பலர். லாக்டவுன் என்பதால் மருந்து கடையும் கிடையாது . இவற்றை நிவர்த்திக்கு வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, ஜீரகம் மாதிரியானவற்றை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.
தேவையான பொருட்கள்:
அதிக நார் இல்லாத இஞ்சி – 100 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – சிறிது
தனி மிளகாய் தூள் – 2 டேபுள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தனியா – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – சிறிது
பெருங்காயம் – சிறிது
நல்லெண்ணெய் – தாளிக்க
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து வேகுமளவு வதக்கவும்.
வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும். ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற விடவும்.
கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கலாம். ஆறு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். மழை, குளிர் காலத்திற்கு ஏற்றது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம், புளிப்பு சேர்க்கலாம்.இஞ்சியை மைய அரைத்தும் செய்யலாம்.
பயன்:
பித்தம், பித்த வாய்வு சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஃபுட் பாய்சன் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜரணிக்க செய்து விடு