பயம்மா இருக்கா, இனிமேல் தான் பயங்கரமா இருக்கும்? விஜய் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.. திருச்சியில் இருந்து தொடங்குகிறது அரசியல் புயல்.. திருச்சி என்ன திமுக கோட்டையா? ஒரு கை பார்த்திடலாம்.. ஆவேசத்தில் தவெக தொண்டர்கள்..!

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி அரசியலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து, தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அக்கட்சியின் அபரீதமான வளர்ச்சி ஆளும் திமுகவின் தூக்கத்தை தொலைத்துவிட்டதாக கூறப்படுகிறது. “யார் யாரையோ பார்த்து ஒரு…

vijay1 1

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி அரசியலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து, தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அக்கட்சியின் அபரீதமான வளர்ச்சி ஆளும் திமுகவின் தூக்கத்தை தொலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

“யார் யாரையோ பார்த்து ஒரு அரசாங்கம் பயப்படலாம். ஆனால், முதல்முறையாக தேர்தலில் நிற்க போகும், தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு சாதாரண சாமானியர்களின் கட்சியை பார்த்து இந்த அளவுக்கு பயப்படுகிறீர்களே?” என்று ஆளும்கட்சியை தவெக நிர்வாகி ராஜ்மோகன் கடுமையாக விமர்சித்தார். கோயம்புத்தூரில் உள்ள விமான நிலையத்தை ‘விஜய் நிலையம்’ என்று மக்கள் மாற்றி பேசும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருப்பதை குறிப்பிட்டு, ஆளும்கட்சிக்கு கோயம்புத்தூர் கோட்டையா அல்லது விஜய்யின் கோட்டையா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், திருச்சி மற்றும் பிற பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அவரது பாதுகாப்புக்கு கட்சி எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை ராஜ்மோகன் விளக்கினார். “எங்களை விடவா தலைவரின் பாதுகாப்புல நீங்க வந்து பெரிய அக்கறை கொண்டவங்க? பகல் இரவா தூக்கத்தை தொலைச்சிட்டு எவ்வளவு பெரிய டீம் வேலை செஞ்சுட்டு இருக்கு தெரியுமா?” என்று, விஜய்யின் பாதுகாப்பு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் குறித்துப் பேசினார்.

கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பற்றியும் அவர் குறிப்பிட்டார். “தலைவர் விஜய்க்காக தன்னுடைய MLA பதவியை தூக்கி போட்டு வந்த தியாக திருவுருவம்தான் புஸ்ஸி ஆனந்த். அவர் புதுவையில் தோற்கடித்தது யாரை தெரியுமா? திராவிட முன்னேற்ற கழகம். திமுகவை தோற்கடித்து MLA ஆனவர் அண்ணன் ஆனந்த்” என்று, ஆனந்தின் அரசியல் வலிமையை ராஜ்மோகன் வலியுறுத்தினார்.

தவெகவை பார்த்து ஆளும் திமுகவுக்கு பயமாக இருக்கிறதா? இனிமேல் பயங்கரமாக இருக்கும். விஜய் ஒரு விஜயகாந்தோ, சரத்குமாரோ, கமல்ஹாசனோ இல்லை. விஜய், விஜய் தான். அவருக்கு ஈடு இணை இல்லை. விஜய்யால் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்றார்கள். ஜெயித்தது மட்டுமின்றி நம்பர் 1 இடத்தையும் பிடித்தார். அதேபோல் விஜய்யால் அரசியலில் ஜெயிக்க முடியாது என்று கூறுகின்றனர். அரசியலிலும் ஜெயித்து முதல்வராவார். அவரை தோற்கடிக்க இனிமேல் தான் ஒருவர் பிறந்து வர வேண்டுமென்றும் தவெக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.