அமெரிக்காவை தாக்க தயாராகும் வெனிசுலா.. ஈரானிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கி குவிப்பு.. ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டம்.. போர் மூளுமா?

அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் அமெரிக்காவில் ஈரானின் ஆதிக்கம் வலுத்து வருகிறது. வெனிசுலா, ஈரானிய அமைப்புகளை பின்பற்றி, உளவு பார்க்கும், ஆயுதம் தாங்கிய மற்றும் தற்கொலை தாக்குதல்…

usa vs veninzula

அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் அமெரிக்காவில் ஈரானின் ஆதிக்கம் வலுத்து வருகிறது. வெனிசுலா, ஈரானிய அமைப்புகளை பின்பற்றி, உளவு பார்க்கும், ஆயுதம் தாங்கிய மற்றும் தற்கொலை தாக்குதல் நடத்தும் ட்ரோன்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

வெனிசுலாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க வெனிசுலாவும் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.

ஆயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு பெரிய இராணுவ பயிற்சியை வெனிசுலா நடத்தியுள்ளது, . மேலும், வெனிசுலா இராணுவம் ஈரானில் தயாரிக்கப்பட்ட மொஹாஜர்-6 ரக ட்ரோன்களையும் வாங்கியுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது,

வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவை குறித்தும் விவாதிக்கப்படும் இந்த நேரத்தில் ஈரானிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கியதை வெனிசுலா மக்கள் ரசிக்கவில்லை. ஏற்கனவே அமெரிக்கா நீண்டகாலமாகவே வெனிசுலா அரசு மீது பொருளாதார தடைகள் மற்றும் அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தி வருவது பெரும் சிக்கலாக உள்ளது,

இந்த நிலையில் வெனிசுலா, ஈரானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து, பில்லியன் கணக்கான டாலர்கள் இரகசிய ட்ரோன் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பயிற்சி ஆகியவை உறுதி செய்யப்பட்டன. வெனிசுலாவின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பான ட்ரோன், ‘அர்பியா-001’, ஈரானின் ‘மொஹாஜர்-2’ அடிப்படையிலானது.

வெனிசுலா போன்ற நாடுகள் இதுபோன்ற மேம்பட்ட ஆயுதங்களை வாங்குவது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய சவாலாக அமையும். இது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கலாம் என்றும், இது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் ஒரு முக்கிய திருப்பமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது,