மோடியை பகைத்தவர் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை.. அமெரிக்காவில் தலைவிரித்தாடும் வேலையின்மை.. முதல்முறையாக உற்பத்தி துறை சரிவு.. வேலையிழப்பு மற்றும் மந்தமான வளர்ச்சி.. கானல் நீராகும் கனவு நாடு..

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் மந்தமடைந்துள்ள நிலையில், வேலையின்மை விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் தொழிலாளர் சந்தை தேக்கமடைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல்…

america job

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் மந்தமடைந்துள்ள நிலையில், வேலையின்மை விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் தொழிலாளர் சந்தை தேக்கமடைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 22,000 புதிய வேலைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு மந்தமான வளர்ச்சியைக் குறிக்கிறது. வேலையின்மை விகிதம் 4.2% இல் இருந்து 4.3% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த விகிதமாகும்.

உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு தொடர்ந்து நான்காவது மாதமாக சரிந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 78,000 உற்பத்தி வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. உற்பத்தி வேலைகளை மீண்டும் கொண்டு வருவதாக பிரச்சாரம் செய்த அதிபர் டிரம்ப்பிற்கு இந்த அறிக்கை ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த மோசமான வேலைவாய்ப்பு அறிக்கை குறித்து, டிரம்ப் நிர்வாகம், பைடன் நிர்வாகத்தின் கொள்கைகளையே காரணம் என்று குற்றம் சாட்டுகிறது. அரசியல் விமர்சகர்கள் சிலர், அரசின் வர்த்தக கொள்கைகள் மற்றும் அதிகபட்ச வரிவிதிப்புகளே இந்த பொருளாதார மந்தநிலைக்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த அறிக்கையானது, அமெரிக்க பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை குறித்த ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொருளாதார தரவுகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

50% வரி போட்ட இந்தியாவில் வேலை வாய்ப்புகளும், உற்பத்தி துறையும் வளர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவில் அதற்கு நேர்மாறாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,