அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது அழைப்பை ஏற்காமல் ஏன் மௌனமாக இருந்தார்? இந்த மௌனத்தின் பின்னால் உள்ள அரசியல் மற்றும் ராஜதந்திரத்தின் ஆழமான அர்த்தத்தை சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
மௌனத்தின் சக்தி:
சர்வதேச உறவுகளில், மௌனம் என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல, அது ஒரு சக்திவாய்ந்த உத்தி. பிரதமர் மோடியின் இந்த மௌனம், இந்தியாவின் முடிவுகளும், அமைதியான அணுகுமுறையும் உலக விவாதங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு எப்போதுமே 100% நம்பகத்தன்மையுடன் இருந்ததில்லை. ஒரு எச்சரிக்கையான உறவாகவும், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய ஒரு உறவாகவும் இருந்தது.
இந்தியா இனி ஒரு ‘வளர்ந்து வரும்’ நாடு அல்ல, மாறாக உலக ஒழுங்கை வடிவமைப்பதில் ஒரு மையப்பங்கு வகிக்கும் நாடு. இந்தியாவின் இந்த வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு அதன் பெரிய மக்கள் தொகை, செழிப்பான பொருளாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் எதேச்சதிகார நாடுகள் அதிகரித்து வரும் ஒரு உலகில் ஒரு நிலையான மக்களாட்சி நாடாக அதன் பங்கு ஆகியவை காரணமாகும்.
டிரம்பை தொலைபேசி அழைப்பையே பிரதமர் மோடி நிராகரித்த சம்பவம், உலக தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமைகிறது. உண்மையான தலைமைத்துவம் என்பது எப்போதும் பேசுவது அல்ல, எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பதை அறிவதுதான் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். மேலும், நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மை பரஸ்பர மரியாதை மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் அமைய வேண்டும், நான் சொல்வதை செய்து தான் ஆக வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுவதில் அல்ல.
இதற்கு முன்பு இருந்த இந்திய தலைவர்கள் அமெரிக்கா என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போட்டிருக்கலாம்.. ஆனால் இப்போது இருப்பது மோடி தலைமையிலான இந்தியா, பதிலடி கொடுக்கும் இந்தியா. இனிமேல் இந்தியாவை பணிய வைக்க வேண்டும் என்று நினைத்தால் கூட தரமான சம்பவம் செய்யும் இந்தியா என்பதை அமெரிக்க அதிபரும், அமெரிக்க அதிகாரிகளும் புரிந்து கொண்டிருப்பார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
