எவ்வளவு தூக்கனும்ங்கிறது முக்கியமில்லை, எதை தூக்கனும்ங்கிறதுதான் முக்கியம்.. விஜய்யை தனித்து போட்டியிட சொல்லும் அரைவேக்காட்டு அரசியல் விமர்சகர்கள்.. திமுகவின் சொம்பு என தவெக தொண்டர்கள் விமர்சனம்..

நடிகர் விஜய் முதல் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றும், முதல் தேர்தலில் அவர் தனித்து போட்டியிட்டு தன்னுடைய வலிமையை நிரூபித்துவிட்டு, அதன் பிறகு அடுத்த தேர்தலில் அவர் கூட்டணி கட்சிகளை அழைத்து ஒரு…

vijay

நடிகர் விஜய் முதல் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றும், முதல் தேர்தலில் அவர் தனித்து போட்டியிட்டு தன்னுடைய வலிமையை நிரூபித்துவிட்டு, அதன் பிறகு அடுத்த தேர்தலில் அவர் கூட்டணி கட்சிகளை அழைத்து ஒரு கூட்டணியாக போட்டியிடலாம் என்றும் ஒரு சில “அரைவேக்காட்டு அரசியல் விமர்சகர்கள்” யூடியூபில் பேட்டி அளித்து வருவதை தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

“முதல் தேர்தலில் ஒரு கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஏதாவது தேர்தல் ஆணைய விதி இருக்கிறதா? 75 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள கட்சிகளே தனித்து போட்டியிட துப்பு இல்லாத நிலையில், 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த கட்சி தனித்து போட்டியிடத் துப்பு இல்லாத நிலையில், ஒரே ஒரு வருடம் மட்டுமே ஆன கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று அறிவுரை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“விஜய்க்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது என்றும், அவர் நிச்சயம் 20 முதல் 30 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி அமைப்பார் அல்லது எதிர்க்கட்சியாக உட்காருவார் என்ற நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து வயிற்றெரிச்சல் படும் தி.மு.க.வின் சொம்புகளாக இருக்கும் அரசியல் அரைவேக்காட்டு விமர்சகர்கள், விஜய் தனித்து போட்டியிட வேண்டும், முதல் தேர்தலிலே அவர் கூட்டணி வைத்தால் அவருக்கு தன் மீதான தன்னம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்” என்று பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்த பேட்டிகளைத்தான் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். “இதே அறிவுரையை 75 ஆண்டுகால கட்சிக்கு உங்களால் கொடுக்க முடியுமா? தனித்து போட்டியிட்டுத் தேர்தலை சந்தித்ததாக வரலாறு இல்லாத தி.மு.க.வின் சாதனையை முறியடிக்க அறிவுரை கூற முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

மொத்தத்தில், விஜயை சீண்டும் வகையில் தி.மு.க.வின் சொம்புகளான இது போன்ற பேட்டிகளை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றுதான் கூறப்பட்டு வருகிறது.