செய்திகள்

அடியோடு ஒழிகிறது பயங்கரவாதம்: 5 முக்கிய பயங்கரவாத தலைவர்கள் அழிப்பு.. முழு விவரங்கள்..

 

ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை சுட்டு துல்லியமாக தாக்கியது. இதில் ஜெய்ஷ்-எ-முகம்மது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புகளின் முக்கியத் தளங்களான பஹாவல்பூர் மற்றும் முரிட்கே பகுதிகளும் அடங்கும்.

இந்த தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஐந்து முக்கியமான பயங்கரவாத தலைவர்களும் அடங்குகிறார்கள்:

1. முதசர் காடியான் காஸ் (அலியாஸ் அபூ ஜுந்தல்) – லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர்; முரிட்கே-யில் உள்ள மார்க்கஸ் தாய்பாவை நடத்தினார். இவரது மரணஅஞ்சலி பிரார்த்தனை பாக். இராணுவ அதிகாரிகளால் நடத்தப்பட்டது.

2. ஹபீஸ் முகம்மது ஜமீல் – ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்தவர். அதன் தலைவர் மவ்லானா மசூத் அஸரின் மாமனார். இளைஞர்களை தீவிரவாதமாக மாற்றவும் நிதி திரட்டவும் முக்கிய பங்கு வகித்தார்.

3. முகமது யூசுப் அஸர் (அலியாஸ் உஸ்தாத் ஜி) – ஜெய்ஷ் அமைப்பில் பயிற்சி தலைவராக இருந்த இவர், ஐ.சி-814 விமான கடத்தல் வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டவர்.

4. காலித் (அலியாஸ் அபூ அகாஷா) – லஷ்கர் அமைப்பில் முக்கிய பாத்திரம் வகித்தவர். காஷ்மீரில் பல தாக்குதல்களில் ஈடுபட்டதோடு, ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தலிலும் சம்பந்தப்பட்டிருந்தார்.

5. முகமது ஹசன் கான் – ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்தவர். பாக் ஆக்கிரமித்த காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தவர்.

இந்த தாக்குதலால் பயங்கரவாதம் அடியோடு ஒழிய வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியா நடத்திய இந்த தீர்மானமான தாக்குதல், நாட்டின் பாதுகாப்பையும், பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.

Avatar photo
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.