இந்தியாவில் தேச பாதுகாப்பு ஒத்திகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சம்பவம் நேற்று பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் நடந்தது. அங்கு திருமணத்திற்கு தயாராக இருந்த மணமகன், தேசிய பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க மணவிழாவையே 2 மணி நேரத்திற்கு நிறுத்தியதாக தெரிகிறது.சுஷாந்த் குஷ்வாஹா என்பவர் பூர்னியாவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அரரியாவுக்கு மணமகளின் இல்லம் நோக்கி ஊர்வலமாக கிளம்ப வேண்டியிருந்தது. ஆனால், இந்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்திய ‘ஆபரேஷன் அப்யாஸ்’ எனப்படும் தேசிய பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதற்காக, அவர் எந்த தயக்கமும் இல்லாமல் 6 மணிக்கு கிளம்ப வேண்டிய ஊர்வலத்தை இரவு 8 மணிக்கு ஒத்திவைத்தார்.
இதுகுறித்து சுஷாந்த் கூறியதாவது: இன்று என் திருமணம் நடக்கிறது. ஆனால் அதைவிட பெருமையாக இந்திய ராணுவம் இன்று பாகிஸ்தானில் தீவிரவாத தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்திய நாள் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. நான் இந்த ஒத்திகையில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் என் திருமணத்தை விட என் தேசம் தான் முதன்மையானது. ராணுவ வீரர்கள் கூட திருமண நாளில் எல்லைக்கு செல்ல தயாராக இருப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாமும் தயங்கமாட்டோம்.”
இந்தியாவில் தேசப்பற்று என்பது தனிமனித மகிழ்ச்சியை விட மேலானது என்பது இந்த மணமகனின் செயலில் இருந்து தெரிய வருகிறது.





