பொங்கல் கோலம்.. ஜல்லிக்கட்டு செல்பி.. பொங்கல் போட்டிகளை அறிவித்த தமிழக அரசு..

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1 அன்று (ஜனவரி 14) வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட உள்ள நிலையில் பொதுமக்கள் சொந்த ஊரில் கொண்டாட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப்…

Pongal Competitions

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1 அன்று (ஜனவரி 14) வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட உள்ள நிலையில் பொதுமக்கள் சொந்த ஊரில் கொண்டாட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நமது பண்பாட்டினையும், கலாச்சாரத்தினையும் இளையோர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பொங்கல் – உழவும் மரபும் என்ற தலைப்பில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிகளும் – அதன் விதிமுறைகளும் பின் வருமாறு:

கலைப் போட்டிகள்
1) கோலப் போட்டிகள்
கருப்பொருள் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழர்
மரபுகளைக் காட்சிப்படுத்தும் கோலங்கள்

2) புகைப்படப் போட்டி (Photography)
கருப்பொருள்: ஐல்லிக்கட்டு மற்றும் பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகள் பற்றிய காட்சிகள், பாரம்பரிய உடைகள், பொங்கல் நாட்களின் போது நடக்கும் நிகழ்வுகள், கால்நடைகள் அலங்காரம் போன்றவற்றைப் புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும்.

3) Reels போட்டிகள்: ஒரு நிமிடத்திற்குள் (Within 1 min)
கருப்பொருள்: நாட்டுப்புறக் கதைகள் / நாட்டுப்புறப் பாடல்கள் / சிலம்பாட்டம் / கரகாட்டம் / ஏறுதழுவுதல் / ஜல்லிக்கட்டு காளை மாடுகளைத் தயார்படுத்துதல் • Reels 1 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

4) சுயமி போட்டிகள் (Selfie)
கருப்பொருள்: பொங்கல் பானையுடன் ஒரு செஃல்பி / ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு செஃல்பி / பொங்கல் நிகழ்ச்சிகள் உடன் செஃல்பி எடுத்து அனுப்பவும்.

தமிழகத்தில் அரசு வேலைகள்.. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் குறித்து அன்புமணி அதிர்ச்சி தகவல்

5) ஆவணப்படம் (Documentary)
கருப்பொருள்: தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடுகிறது • ஜல்லிக்கட்டு விளையாட்டு மற்றும் ஜல்லிக்கட்டு காளை குறித்த பதிவுகள், • உங்கள் சுயமான படைப்பாக இருக்க வேண்டும். * படைப்புகள் வேறு எவராலோ, வேறு எங்கும் இதற்கு முன்னர் பதிவிட்டதாக இருத்தல் கூடாது.

6) ஓவியப் போட்டிகள் (Drawing)
கருப்பொருள்: உழவர் பொங்கல் திருநாள் பற்றிய ஓவியங்கள்
• வகைகள் – (பெயிண்டிங், பென்சில், ஸ்கெட்ச், கிரேயன்ஸ்)

7) பாரம்பரிய உடைப் போட்டி (1 முதல் 13 வயது வரை)
8) மண்பானை அலங்கரித்தல்

போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை 20-01-2025க்குள் கீழ்கண்ட க்யூ ஆர் கோட்டினை ஸ்கேன் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும். சிறந்த படைப்பைப் படைத்த படைப்பாளிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் நேரில் பாராட்டிச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கவுள்ளார்.