Divorce விவகாரத்தில் Warning கொடுத்த AR ரஹ்மான்… சட்டபூர்வமாக எடுத்த அதிரடி நடவடிக்கை…

By Meena

Published:

தமிழ் சினிமா வட்டாரமே தற்போது மிகவும் பரபரப்பாக தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வருடமே விவாகரத்து வருடம் தான் என்பது போல அடுத்தடுத்து திரை பிரபலங்கள் விவாகரத்து செய்து வருகின்றனர். தனுஷில் ஆரம்பித்து ஜி வி பிரகாஷ் ஜெயம் ரவி தற்போது ஏ ஆர் ரகுமான் வரை விவகாரத்து செய்திருக்கிறார்கள். AR ரஹ்மான் விவாகரத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் செய்தியாக தான் இருந்தது.

முதலாவதாக AR ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலம் தனது கணவர் AR ரஹ்மான் உடனான 29 வருட திருமண பந்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதற்குப் பிறகு AR ரஹ்மான் இது சம்பந்தமாக ட்விட்டரில் பதிவிட்ட போது தான் இந்த செய்தி உறுதியானது. AR ரஹ்மான் விவாரத்தை அறிவித்த ஒரு சில மணி நேரங்களிலேயே அவரது இசை குழுவில் பணியாற்றிய பேஸ் கிடாரிஸ்ட் மோஹினி தனது கணவரை பிரிவதாக அறிவித்தார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் பல கட்டு கதைகள் பேசப்பட்டு வந்தது. AR ரஹ்மான்க்கு வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது போல பேச்சுக்கள் நடந்து வந்தன. தற்போது இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக AR ரஹ்மான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்.

அது என்னவென்றால் AR ரஹ்மான் தன்னை பற்றிய உண்மைத்தன்மை இல்லாத அவதூறு பரப்பக்கூடிய வீடியோக்கள் செய்தி பதிவுகள் சமூக ஊடகப் பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அப்படி நீக்கவில்லை என்றால் சட்டரீதியாக சென்று வழக்கு தொடர வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.