எவ்வளவு நேரமா காத்திருக்கிறது? கோபமடைந்த பத்திரிக்கையாளரிடம் மன்னிப்புக் கேட்ட சூர்யா..

By John A

Published:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், இஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் நாளை நாடு முழுவதும் வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடைய கங்குவா படம் வெளியாவதால் தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் கங்குவா திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 10 மொழிகளில் வெளியாகும் கங்குவா படத்தினை ஸ்டுடியோ கீரின்ஸ் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்களும், டீசர் முதல் டிரைலர் வரை அனைத்தும் நல்ல வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. நாளை படம் வெளியாவதையொட்டி படக்குழு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த இரண்டு மாதங்களாக ஈடுபட்டுவருகின்றனர். தற்போது மும்பையில் படக்குழுவினருடன் இருக்கும் சூர்யா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

பா.ஜ.க கூட்டத்தில் திருடுபோன நடிகரின் பர்ஸ்.. முறையிட்டும் கிடைக்காததால் கடுப்பான நடிகர்..

ஆனால் திட்டமிட்டபடி அவரால் குறித்த நேரத்தில் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. இதனால் அங்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் மிகத் தாமதமாக வந்த சூர்யாவை அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் “ஏன் இவ்வளவு தாமதம்? மணி இப்போது? நாங்கள் எவ்வளவு நேரம் பொறுமையாகக் காத்திருப்பது?” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதன்பின் மேடை ஏறிய சூர்யா தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சூர்யா படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் கங்குவா படமும் உலகத் தரத்தில் இருக்கும் என படக்குழுவினர் ஒவ்வொரு மேடைதோறும் கூறி வருவதால் படம் எந்தமாதிரியான அனுபவத்தினைக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.